dinamalar telegram
Advertisement

சட்ட போராட்டத்தால் நீட் தேர்வை விரட்டுவோம்: ஸ்டாலின்

Share
Tamil News
சென்னை : 'மருத்துவ படிப்புக்காக தற்கொலை செய்து உயிர் விடும் அவலத்தை தடுத்திடுவோம்; சட்டப் போராட்டத்தின் வழியே, 'நீட்' தேர்வை விரட்டுவோம்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:நீட் என்ற உயிர்க் கொல்லிக்கு, அரியலுார் மாணவி கனிமொழி பலியாகி இருப்பது, அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மாணவர்களின் உயிர்ப்பலிக்கு, இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை துவக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும் முழு வீச்சில் துவக்கி உள்ளோம்.

பா.ஜ., தவிர்த்து, அனைத்து கட்சிகளின் ஆதரவுடனும், ஒத்துழைப்புடனும், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட முன்வடிவுக்கு, ஜனாதிபதி ஒப்புதலை பெற்று, நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை, இந்த சட்டப் போராட்டத்தில் எந்தவித சமரசமும் கிடையாது என்ற உறுதியை வழங்குகிறேன்.நீட் தேர்வு என்பது தகுதியை எடைபோடும் தேர்வல்ல என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற்பனை, பயிற்சி நிறுவன தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.

கல்வியில் சமத்துவத்தை சீர்குலைக்கும் நீட் தேர்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக, பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர், தங்கள் வீட்டு மாணவர்கள் மனம் தளராதிருக்கும் பயிற்சியை அளித்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
உயிர்காக்கும் மருத்துவ படிப்புக்காக தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தை தடுத்திடுவோம்; சட்டப் போராட்டத்தின் வழியே நீட் தேர்வை விரட்டுவோம். மாணவி கனிமொழி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இனி இதுபோன்ற இன்னொரு இரங்கல் செய்திக்கு, இடம் தராத சூழலை உருவாக்கிடுவோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (62)

 • NATARAJAN R - bangalore,இந்தியா

  மதிப்பிற்குரிய திரு உதயநிதி அவர்கள் நீட் டை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ரத்து என்று அளந்தார். தமிழக அரசு அடிமை அரசு, அவர்களால் அனிதா என்ற பெண் மரணம் அடைந்தார். அப்போதைய அரசு பொறுப்பு என்று தற்போதைய முதல்வர் அறிக்கை கொடுத்தார். தற்பொழுது இவரது ஆட்சியில் மாணவ-மாணவியர் நீட் விவகாரத்தில் மரணம் அடையும்போது உருகி உருகி அறிக்கை கொடுக்கிறார். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். இதை ரத்து செய்ய முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒன்று மட்டும் உறுதி. அடுத்த வருடமும் இவர்கள் சட்டப் போராட்டம் தொடரும் என்று சொல்வார்கள். ஐந்து வருடம் இப்படியே சொல்வார்கள். ஐந்து வருடம் முடிந்து தேர்தல் வரும்போது நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அடுத்த தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுப்பார்கள். நாமும் நம்பி வாக்களிப்போம். இந்த விஷயத்தில் திமுக அதிமுக இடையே எந்த வேறுபாடும் இல்லை. அவர் ஆட்சியில் இருக்கும்போது இவர் அவரை குறை சொல்வார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் இவரைப் குறை செல்வார். பொய்யான வாக்குறுதிகள், இலவசங்கள், வாக்கு அளிக்க பணம் என்று எப்போது நம் மக்கள் திசை திருப்ப பட்டார்களோ அப்பொழுதே தமிழகத்தின் வளமான எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது.

 • Murali Sundaresan - chennai,இந்தியா

  Dmk Pl leave the students.

 • Murali Sundaresan - chennai,இந்தியா

  dmk Pl do not cheat students

 • dina - chennai,இந்தியா

  கல்வியில் சமத்துவத்தை சீர்குலைக்கும் நீட் தேர்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்ன நடந்தாலும் சரி பொய் சொல்வதை விடமாட்டோம் எத்தனை பேர் செத்தாலும் சரி

 • Godyes - Chennai,இந்தியா

  நம்ம அரசியல் வாதிகளுக்கு அஹானா ஆவன்னா தவிர வேறெதுவும் தெரியாது. ஒழுங்கா படிக்கிற பிள்ளைங்களை நாட்டில் ஒரு பொறம் போக்கு கூட்டம் பிரெயின் வாஷ் பண்ணி சாகடிக்கிறது.

Advertisement