dinamalar telegram
Advertisement

பிரதமர் மோடி உலகெங்கும் ஹிந்தியில் தான் பேசுகிறார்

Share
Tamil News
புதுடில்லி :'உலகெங்கும், பல்வேறு சர்வதேச அரங்கிலும் பிரதமர் நரேந்திர மோடி ஹிந்தியில் தான் பேசுகிறார். ஹிந்தியில் பேசுவதற்கு சங்கடப்படும், கூச்சப்படும் காலம் மலையேறிவிட்டது' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறியுள்ளார்.

வாழ்த்து செய்தி



ஹிந்தி தினத்தை முன்னிட்டு, சமூக வலை தளத்தில் நேற்று வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார் அமித் ஷா. அதில் அவர் கூறியுள்ளதாவது:'ஆத்மநிர்பர்' எனப்படும் சுயசார்பு என்பது உள்நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி செய்வது மட்டுமல்ல. மொழிகளிலும் சுயசார்பு வேண்டும். தாய் மொழியுடன், அலுவல் மொழியையும் கற்றால் சுயசார்பை நிச்சயம் அடைய முடியும்.ஹிந்தி தினத்தில், மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.


அனைத்து பணிகளிலும், வேலைகளிலும், தாய்மொழியுடன், அலுவல் மொழியான ஹிந்தியையும் பயன்படுத்த வேண்டும்.நாட்டில் ஒற்றுமைஹிந்தியில் பேசுவதற்கு சங்கடப்படும், கூச்சப்படும் காலம் இருந்தது. சர்வதேச அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில், பிரதமர் மோடி ஹிந்தியில் தான் பேசுகிறார்.

நம் பண்டைய கலாசாரத்தையும் நவீன வளர்ச்சியையும் ஹிந்தி இணைக்கிறது. நாட்டில் ஒற்றுமையையும் ஏற்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (70)

  • Rajas - chennai,இந்தியா

    மோடி இந்தியில் ஜோ பைடன் போன்ற உலக தலைவர்களுடன் பேசி அந்த உலக தலைவர்களும் இந்தியை புரிந்து கொண்டு அதே இந்தியில் அவர்கள் மோடிக்கு பதில் சொல்கிறார்கள் என்று கிளப்பாமல் இருக்கிறார்களே. அதுவே பெரிய விஷயம்

  • Rajas - chennai,இந்தியா

    மற்ற மாநிலங்களில் வேலைக்கு போகும் வட இந்தியர்கள் அங்கேயுள்ள உள்ளூர் மொழியினை கற்று வேலை பார்த்து வருகிறார்கள். நிலைமை இப்படி இருக்க இவர்களோ இந்தி படித்தால் வேலை என்று கிளப்பி விடுகிறார்கள்

  • அப்புசாமி -

    இப்பிடித்தான் மாமல்லபுரத்தில் கண்ணாடி மாளிகையில் பெரியவர் இந்தில பேசி, சீன அதிபர் ஜிங் ஜிங்குக்கு அது புரியாம போயி இன்னிக்கி ஆத்மநிர்பராவில் சீன இறக்குமதி அதிகமாயிட்டு. அடுத்து ஃக்வாட் மாநாட்டில் இந்தில பேசி அசத்துங்க. புட்டின், போல்சனாரோ, ஜிங் ஜிங் எல்லாம் இந்தி கத்துக்கிட்டு இவர் பேச்சைக் கேக்க தயாரா இருக்காங்க.

  • Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா

    உத்தர பிரதேஷ் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல காமெடி காட்சிகள் இதை போலார் பார்க்கலாம்

  • ஆரூர் ரங் -

    முன்பு ஒருமுறை இதே ஹிந்தி நாள் விழாவில் நமது ப சிதம்பரம் 🙄ஆட்சி மொழியான இந்தியை எல்லோரும் கற்று வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்🤗🤗 சொல்வது யார் என்பதைப் பொறுத்து ஆதரவு அல்லது எதிர்ப்பு உருவாகிறது?

    • Rajas - chennai

      அவர் தேவையுள்ளவர்கள் இந்தி படிக்கலாம் என்று சொல்லியிருப்பார். ஆனால் நீங்கள் இந்தி மட்டுமே படிக்க வேண்டும் என்று சொல்லியிருப்பீர்கள்.

Advertisement