dinamalar telegram
Advertisement

டிசம்பருக்குள் 135 கோடி மக்களுக்கும் தடுப்பூசி

Share
Tamil News
புதுடில்லி :'இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் உள்ள 135 கோடி மக்களுக்கும், குறைந்தபட்சம் ஒரு, 'டோஸ்' தடுப்பூசியாவது போடப்பட்டு இருக்கும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய அரசின் தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:நம் தடுப்பூசி உற்பத்தி திறனை பார்க்கும்போது, அடுத்த மூன்றரை மாதங்களில், மேலும் 100 கோடி டோஸ் தடுப்பூசி நம் கைவசம் இருக்கும்.மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்துவதன் வாயிலாக, இந்த ஆண்டு இறுதிக்குள் 135 கோடி மக்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை நாம் எட்டிவிட முடியும்.
'சைடஸ் கடிலா' நிறுவனம் 'சைகோவ் - டி' என்ற உலகின் முதல் மரபணு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இது நம் நாட்டிற்கு மிகப் பெரிய பெருமையை சேர்க்க உள்ளது. இதன் பரிசோதனைகள் நல்ல பலனை அளித்து வருவதை அடுத்து, விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • PKN - Chennai,இந்தியா

    இதுவரை 72 கோடி டோஸ்கள் போடாச்சு பேலன்ஸ் சும்மா 198 ( (135x2) - 72)கோடி டோஸ்கள் மட்டுமே போட வேண்டும். டிசம்பர் முடிய இன்னும்97 நாட்கள் இருகின்றன. அப்படியானால் ஒரு நாளைக்கு சராசரியாக 2.04 கோடி தடுப்பூசிகள் மட்டுமே தயாரித்து போட்டால் போதும் targetஐ அடைந்துவிடலாம்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    இரண்டு தவணைகளும் போட்டால் அதிகபட்ச பாதுகாப்பு உண்டு.

Advertisement