dinamalar telegram
Advertisement

பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழக்குகள்:மீண்டும் விசாரிக்க மறுப்பு

Share
Tamil News
புதுடில்லி :அரசு பணிகளில் பதவி உயர்வில், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முந்தைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதில் உள்ள பிரச்னைகளை மட்டும் பட்டியலிடும்படி, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில், இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, மண்டல் கமிஷன் வழக்கு, எம். நாகராஜ் வழக்கு, ஜர்னயில் சிங் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது.இதில் நாகராஜ் வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 2006ல் தீர்ப்பு அளித்தது. அதில், இட ஒதுக்கீட்டிற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, ஒரு பிரிவினர் பின்தங்கி இருக்கின்றனரா என்பதற்கான புள்ளிவிபர ஆதாரங்கள் மற்றும் பிரதிநிதித்துவத்தில் பின்தங்கி இருப்பதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட வேண்டும்.பின் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 2018ல் இன்னொரு தீர்ப்பு அளித்தது. அதில், 'ஒரு பிரிவினர் பின் தங்கி இருக்கின்றனர் என்பதற்கான தகவல்களை திரட்டத் தேவையில்லை' என கூறப்பட்டுள்ளது.

தெளிவாக இருக்கிறோம்



இந்நிலையில், பதவி உயர்வில், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் உள்ள தடைகளை நீக்கக் கோரி, பல மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளன.இந்த வழக்குகள், நீதிபதி நாகேஸ்வர ராவ், சஞ்சிவ் கன்னா, பி.ஆர். கவாய் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:இந்த வழக்கில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர்பான முந்தைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க முடியாது. ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகளில், பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்பது தெளிவாக உள்ளது.அதனால் எப்படி செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளையோ, உத்தரவுகளையோ பிறப்பிக்க முடியாது.

உரிய பிரதிநிதித்துவம்



பதவி உயர்வு வழங்குவதை, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் பின் தங்கியுள்ளனரா என்பதற்கான புள்ளி விபரங்களின் அடிப்படையில் செய்வதா அல்லது பதவிகளில் உரிய பிரதிநிதித்துவம் உள்ளதா என்ற அடிப்படையில் செய்வதா என்பது குறித்து, சட்டத்துக்கு உட்பட்டு மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.

பதவி உயர்வு வழங்குவதில் மாநிலங்களுக்கு உள்ள தடைகள், இடையூறுகள், பிரச்னைகள் குறித்து மட்டுமே இந்த அமர்வு விசாரிக்கும். இது தொடர்பான தகவல்களை அளிக்கும்படி மாநில அரசுகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.தங்களுக்கு உள்ள பிரச்னைகள் தொடர்பாக, மாநில அரசுகள் ஒரு அறிக்கையாக, இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஏற்கனவே ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சில மாநிலங்களும் தாக்கல் செய்துள்ளன.இவ்வாறு மாநிலங்கள் குறிப்பிடும் பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளை உருவாக்குவோம்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இதையடுத்து, வழக்கின் விசாரணை, அக்., 5க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



குழப்பத்தை ஏற்படுத்திய தீர்ப்புகள்

தன் வாதத்தின்போது, அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியுள்ளதாவது:மத்திய அரசுக்கு உள்ள மிகப் பெரிய குழப்பம், பதவி உயர்வு தொடர்பாக, மூன்று உயர் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்புகளே. இரண்டு தீர்ப்புகள் பதவி உயர்வு வழங்கலாம் என்று கூறுகின்றன. மற்றொரு தீர்ப்பு அதற்கு எதிராக உள்ளது.
இந்த குழப்பத்தால், மத்திய அரசில், செயலர்கள் நிலையில் உள்ள 1,400 பதவிகளில் பதவி உயர்வு வழங்க முடியவில்லை. இடஒதுக்கீட்டுக்கான அளவைத் தவிர மற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கலாமா என்பதும் தெரியவில்லை.இதைத் தவிர, ஏற்கனவே உள்ள நிலை தொடர வேண்டும் என்ற தீர்ப்பால், 2,500க்கும் மேற்பட்ட வழக்கமான பதவி உயர்வும் வழங்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

    ஒழுங்கா வேலை செய்றவனுக்கு பதவி உயர்வு கொடுங்கப்பா. அதிலே சாதிய கொண்டு வந்த இந்தியா உருப்படாது. குழப்பமான தீர்ப்புக்கள்.

  • Darmavan - Chennai,இந்தியா

    ஒதிக்கீடுகள் ஒழிக்கப்பட வேண்டும் அதுவே திறமையின்மைக்கும் ஊழலுக்கும் காரணம்

  • Darmavan - Chennai,இந்தியா

    இப்படி தெளிவில்லாமல் வழங்கும் தீர்ப்பு என்ன தீர்ப்பு மற்றவர்களுக்கு புத்தி சொல்பவர்கள் தாம் ஓழுங்காக இருக்கிறார்களா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

  • duruvasar - indraprastham,இந்தியா

    நீதிமன்ற தீர்புகளில் உட்படுத்தப்பட்டாத மற்ற பிரிவினர் பதவி உயர்வு கேட்டால் அவர்களை சுட்டு தள்ளலாம் அல்லது சுராக்களுக்கு இரையாக்கி விடுங்கள். இதுதான் முறையான சமூகநீதி யாக இருக்கும்.

  • Sathyanarayanan Sathyasekaren -

    0.............

Advertisement