dinamalar telegram
Advertisement

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்

Share

இந்திய நிகழ்வுகள்ராஜிவ் சக்சேனா கைது

புதுடில்லி: வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் தொழிலதிபர் ராஜிவ் சக்சேனா, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் 2019ல் கைது செய்யப்பட்டார். இந்தியாவுக்கு நாடு கடத்தி வரப்பட்ட அவரிடம், தீவிர விசாரணை நடந்தது. மார்ச்சில் சக்சேனாவுக்கு ஜாமின் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஜாமினில் இருக்கும் சக்சேனா, வங்கி மோசடியில் ஈடுபட்டதாக கூறி, அவரை அமலாக்கத் துறையினர் நேற்று கைது செய்தனர்

கையெறி குண்டுகள் செயலிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே மக்கள் அதிகம் கூடும் பரிம்போரா - பந்தசவுக் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினர் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு மணல் மூட்டையை சோதனை செய்தபோது, அதில் ஆறு கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த சீன கையெறி குண்டுகளை பறிமுதல் செய்த பாதுகாப்புப் படையினர், அவற்றை செயலிழக்கச் செய்தனர்.

சாலை விபத்தில் 4 பேர் பலி

தானே: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஆட்டோ மீது, கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த வர்ஷா வலேச்சா, 51, ஆர்த்தி வலேச்சா, 41, மற்றும் ராஜ் வலேச்சா, 12, என்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும், டிரைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

நான்கு மாடி கட்டடம் இடிந்ததில் இரண்டு குழந்தைகள் பலி

புதுடில்லி-டில்லியில் நான்கு மாடி கட்டடம் இடிந்ததில், இரண்டு குழந்தைகள் உயிரிழந்தன.டில்லியில் உள்ள சப்ஸி மண்டி என்ற இடத்தில் நான்கு மாடி கட்டடம் நேற்று திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த 12 மற்றும் 7 வயதுடைய இரண்டு குழந்தைகளை தீயணைப்பு படையினர் மீட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கட்டடத்தின் கீழ் பகுதியில் சமீபத்தில் சீரமைப்பு பணிகள் நடந்ததாக, அந்த பகுதியில் வசித்தவர்கள் தெரிவித்தனர்.

தமிழக நிகழ்வுகள்நிழற்குடையால் பீதியில் பயணியர்.
அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட அரும்பாக்கத்தில், என்.எஸ்.கே., பேருந்து நிறுத்தம் உள்ளது. இப்பேருந்து நிறுத்த நிழற்குடை, எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில், தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் பயணியர் பீதியில் உள்ளனர். அதை அப்புறப்படுத்த, மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன், நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துஉள்ளது.

ராயப்பேட்டை : ராயப்பேட்டையில் உள்ள ஓட்டல்களில், 65 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது.
65 கிலோ அழுகிய சிக்கன் பறிமுதல்
சென்னை, ராயப்பேட்டை, டக்டர் பெசன்ட் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களில், உணவு பாதுகாப்பு துறை சென்னை மாவட்டம் நியமன அலுவலர் டாக்டர் சதீஷ் குமார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சதாசிவம் என, ஏழு பேர் கொண்ட அதிகாரிகள் குழு, நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில், 65 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டன.
அடாவடி தி.மு.க.,வினரை 'பின்னி எடுத்த' கிராம மக்கள்
தஞ்சாவூர்-பேக்கரியில் ரகளை செய்த தி.மு.க.,வினரை, கிராம மக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.தஞ்சாவூர், சூரக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தன், 48, மன்னார்குடி - பட்டுக்கோட்டை பிரிவு சாலையில், பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்.

ஆபாச பேச்சு

மன்னார்குடி நகர தி.மு.க., இளைஞரணி செயலர் சுதாகர், 42, விவசாய தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் பாண்டவர், 54, மாணவரணி நகர துணைச் செயலர் முருகேசன், 48 உள்ளிட்ட எட்டு பேர், நேற்று முன்தினம் மாலை காரில் வந்துள்ளனர்.சூரக்கோட்டையில் உள்ள ஆற்றில் குளித்துவிட்டு, பேக்கரியில் டீ குடித்தனர். அருகில் உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் கேட்டு தகராறு செய்த அவர்கள், கடையில் இருந்த ரேவதி என்ற பெண்ணிடம் ஆபாசமாக பேசி, அவரது துப்பட்டாவை பிடித்து இழுத்துள்ளனர்.

ஆனந்தன் மகன் வசந்தன், 24 மற்றும் ஊழியர்கள், இதை தட்டிக் கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த கும்பல், அவர்களை கடுமையாக தாக்கி, பேக்கரியில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.இதில், ரேவதி, வசந்தன், பேக்கரி ஊழியர்கள் திருப்பதி, 25, பாஸ்கர், 24 வாடிக்கையாளர் கார்த்திகேயன், 35 ஆகியோர் காயமடைந்தனர்.

6 பேர் படுகாயம்

தகவலறிந்து வந்த கிராம மக்கள், தி.மு.க.,வினரை மடக்கிப் பிடித்து, அடித்து உதைத்தனர். அவர்களில், இருவர் காரில் தப்பியோடினர். கிராம மக்கள் தாக்கியதில், சுதாகர், பாண்டவர், முருகேசன் உட்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, ரேவதி புகார்படி, தி.மு.க., பிரமுகர்கள் ஆறு பேர் மீதும், தி.மு.க., நிர்வாகி பாண்டவர் புகார்படி, சூரக்கோட்டையைச் சேர்ந்த ஒன்பது பேர் மீதும், தஞ்சாவூர் தாலுகா போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

4 லாரிகள் மோதல் 10 பேர் படுகாயம்; 2 பேர் பலி
தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே் 4 லாரிகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் இருவர் பலியானார்கள். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement