Load Image
dinamalar telegram
Advertisement

நீட் தேர்வுக்கு அஞ்சிய மாணவன் தற்கொலை: முதல்வர் ஸ்டாலின் கவலை

Tamil News
ADVERTISEMENT
சென்னை: நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு வேதனை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தேர்வு நீக்கப்படும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என தெரிவித்து உள்ளார்.

நீட் தேர்விற்கு பயந்து இன்று சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
Latest Tamil News

இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்:
மாணவர் தற்கொலை செய்தி அறிந்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். நீட் தேர்வு கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வில் விலக்கு கேட்டு நாளை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மாணவர்கள் விபரீத முடிவு எடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டமைத்து கொடுக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

மத்திய அரசின் பிடிவாதம் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வளர வேண்டிய மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாகிறது. நீட் தேர்வு முறைகேடு, ஆள்மாறாட்டம், மாணவர்களின் தற்கொலைகள் மத்திய அரசின் முடிவை மாற்றவில்லை. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதன் அவசியம் மேலும் வலுவடைகிறது. நீட் தேர்விற்கு எதிரான நமது சட்ட போராட்டம் துவங்குகிறது. அது நீக்கப்படும் வரை சட்டப்போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (176)

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  மே மாதத்தில் இருந்து ஆட்சி செய்யும் நீர் இந்த தேர்வை எதற்காக தடை செய்யவில்லை ...வாக்குறுதி எதற்கு காப்பாற்றப்பவில்லை ...

 • பச்சையப்பன் கோபால் புரம். -

  மாணவன் தனுசு சற்று அவசரப்பட்டு விட்டார். இன்று தளபதி நீட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து தீர்மானத்தை வெற்றியுடன் நிறைவேற்றுவார். இன்று வரை அந்த மாணவர் பொறுத்திருந்தால் இப்படி தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டிருக்காது. இப்படியாக இந்த நீட் மரணத்துக்கு ஒன்றிய அரசுதான் பொறுப்பேற்று அவர் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாயும் குடும்பத்தில் இருவருக்கு அரசு வேலையும் குடுக்க வேண்டும்.

 • RajanRajan - kerala,இந்தியா

  நீட் தேர்வு பெயரிலே செப்புடி வித்தை காட்டுறாங்க.

 • K.R PREM KUMAR -

  தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் நீட் தேர்வை உற்சாகத்துடன் எழுதி இருக்கிறார்கள். இந்த இளம் சிங்கங்களை வாழ்த்த மனமில்லாத தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும், இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோற்று மூன்றாவது முறை தேர்வையே சந்திக்காமல் பயந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவருக்கு முக்கியத்துவம் அளித்து அறிக்கையும் அஞ்சலி செலுத்த நேரில் செல்வதுமான செய்கைகள், தேர்வு எழுதிய 16 லட்சம் மாணவ- மாணவிகளை அவமதிப்பதை போல் இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயற்கை மரணங்களால் நீட் தேர்வு ரத்து ஆக எப்போதுமே வாய்ப்பில்லை.

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  இளம் பிஞ்சுகள் மனதில் பயம், அவநம்பிக்கை, தப்பான அபிப்ராயம் இவற்றை எல்லாம் விதைத்து விட்டவர்கள் யார்? சுயநல அரசியல்வாதிகள் தான் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி பலி கொடுத்து விட்டு அதிலும் மரண அரசியல் செய்வார்கள். கல்வி, மருத்துவம் விவசாயம் யாவிலும் இப்போது அரசியல் தான் நடக்கிறது. மக்கள் நலன், சமூக அமைதி பற்றி கவலைப் படாமல் உண்மையான மக்கள் நலன் தேசப் பற்றுக் கொண்ட அரசியல்வாதிகள் மீது பழி வாங்க, பழி போட வழி தேடுவார்கள். ஆனால் மக்களோ சிந்திக்கும் செயலற்று இவர்களை இனம் காண மாட்டாமல் இலவசத்துக்கு அடிமையாகி நாட்டையும் மக்களையும் அழிவின் வழியே போய் ஆப்கான் போன்ற நிலையை அடைய போகிறார்கள்.

Advertisement