ADVERTISEMENT
சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் செப்.,11 அன்று மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
மகாகவி பாரதியாரின் நினைவுநாளான செப்.,11 அன்று அரசின் சார்பில் ஆண்டுதோறும் ‛மகாகவி நாளாக' கடைபிடிக்கப்படும். இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை போட்டி நடத்தி,‛பாரதி இளங்கவிஞர் விருது' ஒரு மாணவர் மற்றும் மாணவிக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையுடன் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியாரின் பாடல்கள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து ‛மனதில் உறுதி வேண்டும்' என்று புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும்.

பாரதியாரின் வாழ்க்கை மற்றும் அவரின் படைப்புகள் குறித்து ஆய்வு செய்த அறிஞர்களான மறைந்த பெ.தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி. ரகுநாதன், இளசை மணியன் ஆகியோர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்திற்கும் மற்றும் மூத்த அறிஞர் சீனி. விசுவநாதன், பேராசிரியர் மணிகண்டன் ஆகியோருக்கும் தலா ரூ.3 லட்சம் ரூபாய், விருது, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
பாரதியின் உருவ சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்களை பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொது மக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்
பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு, சென்னைாபரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித்துறை சார்பில் நடத்தப்படும்
திருச்சி பாரதிதாசன் பல்கலையில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்
உ.பி., மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பாரமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்து உள்ளார்.
வாசகர் கருத்து (51)
அப்பதான கலைஞர் கண்றாவி நாள்னு ஒன்னு கொண்டுவரமுடியும்.
ஒரு மூடன் கதை சொ.. ன்..னா..ன்...
பாரதிதாசன் பல்கலையில் பாரதியார் பேரில் இருக்கையா ? தாசனுக்கு முன்னதாக, பாரதியார் பேரில் அல்லவா முதலில் பல்கலைக்கழகம் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். அது சரி, எத்தனை வருடங்கள் கருணா தமிழ் நாட்டை ஆண்டிருக்கிறார் ? இது வரையில் ஏன் மகாகவியின் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை ? ஏதோ கடனுக்காக செய்து ஓரு தியாகியின் பூகழுக்கு களங்கம் செய்து விடாதீர்கள்
வரவேற்கத்தக்க அறிவிப்பு . குறிப்பாக இன்றைய மாணவர்களிடையே தமிழ் பற்றை வளர்க்க, தாய்நாட்டு பற்று வளர்க்க பாரதியார் பெருமையை உணர வைக்க இம்மாதிரி போட்டிகள் உதவும் .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
எதிர் கட்சியினர் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை ஏதாவது குறை சொல்லியோ, அல்லது கோரிக்கை வைத்தோ அறிக்கை விட்டால், முதல்வர் உடனடியாக அதைக்கேட்டு முடிந்தவரை ஆவனசெய்கிறார்.....நீ என்ன சொல்ல நான் என்ன கேட்க என்ற ஈகோ இல்லாது செய்யப்படுகிறார்.....சில நாட்களுக்கு முன்பு, அண்ணாமலை திமுக பாரதியாரை மறந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார்.....இதோ கைமேல் விடை......சட்டசபை நிகழ்வுகள் நேரலை வேண்டுகோளும் உடனடியாக நிறைவேற்றப்பட்டது. இப்படிப்பட்ட செயல்பாடுகள், எதிரிகளை திக்கு முக்காட செய்யும்......உருப்படியான பிரச்சனைக்காக தேடிக்கொண்டிருக்கிறார்கள்.....