dinamalar telegram
Advertisement

பாராலிம்பிக் வீரர்களுக்கு விருந்தளித்து பிரதமர் பாராட்டு

Share
புதுடில்லி: பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம் உட்பட 19 பதக்கங்கள் பெற்றது. பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு, பிரதமர் மோடி இன்று தனது இல்லத்தில் விருந்து அளித்து கலந்துரையாடினார்.
அப்போது பிரதமர் பேசுகையில், பாராலிம்பிக் சாதனைகளை டோக்கியோ ஒலிம்பிக் முறியடித்து விட்டது. போட்டிகளில் வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்த வீரர்களுக்கு பாராட்டுகள். அவர்களின் இந்த சாதனை, விளையாட்டு சமூகத்திற்கு ஊக்கமளிக்கும். விளையாட்டுகளில் முன்னேற இளம் வீரர்களுக்கு எழுச்சியூட்டும். அவர்களின் செயல்திறனால் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு பெருமளவு அதிகரித்து உள்ளது.
பாராலிம்பிக் தடகள வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு கடினமான தடைகளை கருத்தில் கொண்டு இந்த செயல் திறன் போற்றத்தக்கது. உண்மையான விளையாட்டு வீரர், வெறும் தோல்விகளால் துவளாமல் முன்னேறி செல்வார். அந்த பாராலிம்பிக் வீரர்கள் தான் நாட்டின் தூதர்கள். தங்கள் குறிப்பிடத்தக்க செயல்திறனால், உலக அரங்கில் நாட்டின் புகழை உயர்த்தி உள்ளனர். இவ்வாறு பிரதமர் கூறினார்.
பல்வேறு வீரர்கள், தாங்கள் பதக்கம் வென்ற விளையாட்டு உபகரணங்களில் கையெழுத்திட்டு பிரதமருக்கு பரிசாக வழங்கினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

  • babu - tiruchi,இந்தியா

    எதிர் கட்சி குறைகூற கூடி வரூவாங்க

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    மாஸ்க் மண்ணாங்கட்டி சமூக இடைவெளி கோவிட் பாதுகாப்பு என்று எதுவும் இல்லாமல்... பிரதமர். ஆனால் இதை மறைத்து செய்தி கருத்து எல்லாம் போடுகிறார்கள். இவருக்குP.A, யாரும் இல்லியா? அல்லது போட்டோவுக்காக இப்படி என்று நினைக்கிறேன். கேவலமா இருக்கு.

  • அப்புசாமி -

    ஜனாதிபதி கூட பிசியா இருப்பாரு போலிருக்கு. பெரியவர் ரொம்ப ஃப்ரீயா எல்லோருக்கும் பார்ட்டி குடுக்குற அளவுக்கு நேரம் இருக்கு.

  • Jayanthi Srinivasan -

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • ROHAN JAMMU KASHMIR - KARUR,இந்தியா

    ஜெய் ஹிந்த், பாரத மாதாவின் உண்மை தலைமகன்கள், வாழ்க பாரதம், வெல்க உண்மை தலைவனின் தொடர் முயற்சி

Advertisement