dinamalar telegram
Advertisement

மணல் கொள்ளையை வேடிக்கை பார்க்கும் பொதுப்பணித்துறை: கமல் வருத்தம்

Share
சென்னை: கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் மணல் கொள்ளை நடந்து வருவதாகவும், இதனை பொதுப்பணித்துறை சிறப்பான முறையில் வேடிக்கை பார்ப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்து வருவது அம்பலமாகியுள்ளது. 50 ஆண்டுகளாக தமிழகத்தில் நிகழ்வது தான். ஆனால், இந்த மணல் கொள்ளை தலைமை செயலகத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் நாற்புறமும் அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில் நடக்கிறது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் சாலையின் வழியாக லாரி லாரியாக மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது. பொதுப்பணித்துறை சிறப்பான முறையில் வேடிக்கை பார்த்துள்ளது.
மிகமிக குறைந்தபட்ச மதிப்பு வைத்து கணக்கிட்டாலும் நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மணல் ஏப்பம் விடப்பட்டுள்ளது. வருடத்திற்கு சுமார் 11 கோடி ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பு. இவையெல்லாவற்றையும் விட பெரும்கொடு என்னவென்றால், இந்த மணல் கட்டுமானத்திற்கு உகந்தது அல்ல. இம்மணலைக் கொண்டு கட்டடம் கட்டினால் நிச்சயம் இடிந்து விழுந்துவிடும் என்கிறார்கள் கட்டுமான நிபுணர்கள். அப்படியெனில், இந்த மணலை அள்ளி கட்டங்கள் கட்டிய மகானுபாவர்கள் யார்? அவற்றைப் பயன்படுத்தப்போவது யார்? அதில் வாழப்போகிற மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு?
கூவம் கடலுடன் இணையும் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் சூழியல் மிக மோசமாக அழிந்துவருகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறார்கள். அனுமதி இல்லாமல் திருடுகிறார்களே என்று வருந்துவதா? அரசுக்கு வருவாய் இழப்பு என்று வருந்துவதா? அரசு இயந்திரம் உறங்கிக்கொண்டிருக்கிறதே என்று வருந்துவதா? ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடர்கிறதே என வருந்துவதா? சூழியல் சீரழிகிறதே என்று வருந்துவதா? இந்த மண்ணில் கட்டப்படும் கட்டங்களால் ஏற்படப் போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா?. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (20)

 • Arachi - Chennai,இந்தியா

  சுட்டிக்காட்டுவது நல்லது.சார் இது கடந்த 100 நாளாக நடக்குதுங்களா? குறைகளை புள்ளிவிவரமாக எடுத்துக்கொண்டு தீர்வுகாணுகிறது இந்த அரசு.நீங்கள் சடடசபைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் சினிமா மாதிரி ஹீரோ இரண்டரை மணிநேரத்தில் குற்றங்களை தடுத்துவிட முடியாது

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  சில முக்கிய தலைகள் அரசில் இருக்கும் பொது சர்வசாதாரணம். ஸ்டாலின் ஆசீவாதப்படி தான் எல்லாமே நடக்கிறது. இதற்க்கு எல்லா துறைகளும் ஒத்து உழைக்கின்ற என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

 • babu - tiruchi,இந்தியா

  அய்யய்யா கமலஹாசன் பணம் இருந்தால் செய்தி சேனல் ஆரம்பிச்சி மக்களிடம் விழிப்பூட்டலாம்.

 • Ram - Thanjavur,இந்தியா

  மணல் கொள்ளை பற்றி நான் தசாவதாரம் படத்தில் சொல்லிவிட்டேன்... என்னால அவோலு தன முடியும் அழுத்துருவேன்

 • Harish -

  அதிமுக ஆட்சி என்றால் கண்டனம். திமுக ஆட்சியில் மணல் கொள்ளைக்கு வருத்தம். இது தான் இவர்களின் வீரம் நடுநிலை. திமுக என்றால் அனைவரும் பயப்படுகின்றனர். சினிமா துறை முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. திமுக ஒரு விஷச்செடி. அதை பிடுங்கி எறிய ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் தற்போது இல்லை.

Advertisement