dinamalar telegram
Advertisement

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி

Share
சென்னை: பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. அதன்படி, வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த இல.கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ‛விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று (செப்.,8) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து பேராவது கொண்டு 'விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ‛மத உரிமைகளை பின்பற்றுவதை விட வாழ்வாதார உரிமை மிக முக்கியமானது. கொரோனா காலத்தில் பொதுநலனை கருத்தில் கொண்டே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது,' எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (50)

  • அருண், சென்னை -

    மெட்ராஸ் ஐகோர்ட் தீமுகாவின் கோட்டை, அங்கு எப்படி இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்?

  • இவன் -

    ஹா ஹா எவளோ கதறல், இது north இந்திய பண்டிகை, அமெரிக்கா பண்டிகை னு 🤣🤣🤣. அத பத்தி உங்களுக்கு என்ன கவலை. ஹிந்துக்கள் ஒற்றுமை ஆகுறாங்க னு இவனுங்க ளுக்கு எரிச்சல்

  • Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    எல்லா மதத்தையும் ஒரே மாதிரி மதித்து தீர்ப்பு சொல்ல சென்னை நீதிமன்றம் ஏன் முயற்சிக்கவில்லை ,

  • அறிவு -

    சில நீதிபதிகள் தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்த இருந்த இந்திய நாடு

  • Rajas - chennai,இந்தியா

    ரோட்டில் வருடத்திற்கு ஒரு முறை வைக்கப்படும் பெரிய பிள்ளையார் சிலைகள் மற்றும் பிள்ளையார் ஊர்வலங்கள் நம் தமிழகத்தின் வழிபாடு முறை அல்ல. வீட்டில் வைத்து நீர் நிலைகளில் கரைக்கப்படும் களிமண் விநாயகர் வீட்டில் இருக்கும் தோஷங்கள் மற்றும் துர்சக்திகளை வெளியேறுவர் என்பது நமது நம்பிக்கை. காலம் காலமாக கால பூஜைகளை சரியாக செய்யும் கோவில்களில் உள்ள விக்கிரங்களுக்கே சக்தி அதிகம். திடீர் கோவில்களில் எந்த சக்தியும் இல்லை.

Advertisement