dinamalar telegram
Advertisement

தனியார் பள்ளி இயக்குனர் உட்பட 7 பேர் மீது வழக்கு

Share
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை சாலையிலுள்ள செவன்த்டே பள்ளி மற்றும் அறக்கட்டளை அலுவலகம் முன், நேற்று முன்தினம் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. அப்போது, கூட்டம் அதிகமாக சேர்ந்ததால், கொரோனாவை பரப்புவதாகவும், கிறிஸ்துவ புத்தகத்தை வினியோகம் செய்வதாகவும், அகில இந்திய விஸ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து அமைப்பினர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக, மத்திகிரி வி.ஏ.ஓ., தண்டபாணியும், மத்திகிரி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, அப்பள்ளி மற்றும் அறக்கட்டளை இயக்குனர் பண்டிட் விஸ்வா, பள்ளி மேலாளர் ஜெபராஜன், அந்தோணிதாஸ் உட்பட, ஏழு பேர் மீது, மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement