dinamalar telegram
Advertisement

தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு நல்லாசிரியர் விருது: ஜனாதிபதி வழங்கினார்

Share
புதுடில்லி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உட்பட நாடு முழுவதும் 44 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விருதுகளை வழங்கி ஜனாதிபதி பேசுகையில், டாக்டர் ராதாகிஷ்ணன், தத்துவஞானியாகவும், மேதையாகவும் உலகம் முழுவதும் அறியப்பட்டார். இருப்பினும், ஆசிரியராக மட்டுமே தான் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் விரும்பினார். சிறந்த ஆசிரியர் என்ற முத்திரையை அவர் பதித்துவிட்டு சென்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை லலிதாவும், திருச்சி, மணிமண்டபம் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவியும் நல்லாசிரியர் விருதை பெற்று கொண்டனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • Believe in one and only God - chennai,இந்தியா

    நான் பள்ளியில் (middle school) படிக்கும் போது , ஆசிரியர்களின் குழந்தையுடன் விளையாடி அந்த குழந்தையை கவனிக்க சொன்னார்கள். 3 ஆசிரியர்கள் ஒரு பாடமும் எடுக்கவில்லை. அவர்கள் இப்போ கைநிறைய பென்சன் வாங்குகிறார்கள்

  • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

    பல தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மிகமிகக்குறைந்த சம்பளத்திற்கு கொத்தடிமைகள் போலே வேலை செய்கின்றனர். தனியார் கலைக்கல்லூரிகளிலும், தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் இதே நிலைமை தான்... அப்படியிருக்க ஆசிரியத்தொழில் எப்படி தெய்வீகமாகும் ? "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்பது பழமொழி... "மாதா, பிதா, பணம், பணமே தெய்வம்" என்பது புதுமொழி... கல்வி என்பது வியாபாரமாகி, பல மாமாங்கங்கள் ஆகி விட்டன.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    பல ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கொஞ்சநாள் வட்டித்தொழிலை கைவிட்டு மாணவர்களுக்கு ஒழுங்காக பாடம் சொல்லித்தந்தால் அடுத்த தலை முறை நன்கு வளரும்

Advertisement