Load Image
dinamalar telegram
Advertisement

அடுத்த பாராலிம்பிக்கில் தங்கம் நிச்சயம்: மாரியப்பன் உறுதி

சென்னை: ‛‛2024 ல் நடக்கும் பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன்'' என டோக்கியோவில் வெள்ளி வென்ற, தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தெரிவித்து உள்ளார்.
Latest Tamil News

கடந்த 2016 ரியோ நகரில் நடந்த பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் மாரியப்பன் டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றார். இதன் மூலம் உயரம் தாண்டுதலில் இரு பதக்கம் வென்ற இந்தியர் ஆனார். டில்லி திரும்பிய மாரியப்பனுக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்று பாராட்டு தெரிவித்தார்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
இந்நிலையில் இன்று(செப்.,05) விமானம் மூலம் டில்லியில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில், தமிழக பாராலிம்பிக் சங்கம் சார்பில் மாரியப்பனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
Latest Tamil News
பின்னர் மாரியப்பன் கூறியதாவது:
தங்கப்பதக்கத்தை இலக்காக வைத்து வெள்ளிப்பதக்கம் வெல்ல முடிந்தது. 2024 ல் நடக்கும் பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன். எனது பயிற்சியாளருக்கும், எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (2)

  • Tamil, covai -

    He is not awarded for cash prize? he is still begging for government job

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    வெள்ளிநாயகனுக்குப் பாராட்டுகள் - வாழ்த்துகள். முயற்சி வெல்லட்டும்.

Advertisement