Load Image
dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்: கருணாநிதி நினைவிடம் கட்சி நிதியில் கட்டலாமே!

Tamil News
ADVERTISEMENT

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:சி.சிவகுமார், கும்பகோணத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடும் நிதி நெருக்கடி இருப்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கால தாமதம் ஆகும் என, தி.மு.க., அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாயில் நினைவிடம் அமைக்க போவதாக, தி.மு.க., அரசு அறிவித்துள்ளது.

இன்றைய சூழலில் கொரோனா தொற்று காரணமாக, சுகாதார துறைக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. மக்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் போது, நினைவிடம் அமைப்பது இப்போது தேவையா?பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், கொரோனா மற்றும் நிதி நெருக்கடி குறைந்த பின், தன் தந்தை கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கலாமே. இப்போது என்ன அவசரம்?Latest Tamil News

முந்தைய அரசு செய்த ஊதாரி செலவுகளை கண்டித்த தி.மு.க.,வினர், இப்போது அதையே செய்யலாமா? கருணாநிதிக்கு நினைவிடம் உடனே அமைத்தாக வேண்டும் என்றால், தி.மு.க.,விடம் குவிந்துள்ள பணத்தில் இருந்து அதை கட்டி, கட்சியின் கவுரவத்தை காக்கலாமே! தேர்தல் காலத்தில் அரசியல் ஆலோசனை சொல்வதற்காக மட்டும், பிரசாந்த் கிஷோருக்கு 360 கோடி ரூபாய் கொடுக்க முடிந்த தி.மு.க.,வால், கருணாநிதியின் நினைவிடத்துக்கு 39 கோடி ரூபாய் கொடுக்க முடியாதா?

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் போல் அமைக்கப்பட்ட நுழைவு வாயிலை அகற்ற வேண்டும் என, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.ஆனால் இன்று அதே தி.மு.க., கருணாநிதி நினைவிடத்தில் உதயசூரியன் உதிப்பது போல கட்டுமானம் செய்கிறது.இதிலிருந்து தி.மு.க., இன்னும் திருந்தவில்லை என்பது நன்கு புரிகிறது!
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (197)

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  திமுகவின் கருணாநிதி அவர்கள், இறக்கும் போது முதல் அமைச்சராக இருக்கவில்லை. திமுக அவரது குடும்பச் சொத்தாக இருந்தால், கட்சிப் பணத்தைக் கொண்டு சொந்த நிலத்தில் நினைவிடம் நிறுவலாம். சரியான வழி என்றால், சொந்த நிலத்தில் கோயில் கட்டலாம்.

 • binakam - chennai,இந்தியா

  குப்பை இம் கோபுரத்திற்கு போகும். சுத்தம் அசுத்தம் பிரிக்க முடியாதது. பல அசுத்தத்தில் இதுவும் இருந்துவிட்டு போகட்டும்,

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

  இவருக்கு ஏய்யா அரசு சார்பில் நினைவகம் கட்டக்கூடாது... இப்ப சொல்லுங்கய்யா...

 • RandharGuy - Kolkatta,இந்தியா

  இந்தியாவின் தலை நகரமே சதுக்கங்கள் நிறைந்த நகரம் .....ஆனால் எங்கள் தலைவருக்கு எங்களுக்காக உழைத்த உன்னத தலைவருக்கு சிலையும் வைப்போம் நினைவு இல்லம் அமைப்போம் .......எங்கள் அரசு ....ஊழல் என்று கூப்பாடு போடும் கூட்டம் .....கொஞ்சம் ஊழலை விட கொடிய சம்பவங்களை பற்றி வெளியில் பேசமுடியாமல் இருக்கும் நிலைதான் ....வெற்றி நடை போடும் தமிழகம் .....பீடு நடை போடும் தமிழகம்

 • RandharGuy - Kolkatta,இந்தியா

  .. கலைஞர் யார் தெரியுமா.? சமூகம் மூடநம்பிக்கைகளில் மூழ்கி இருந்தபோது தனது புரட்சிகரமான எழுத்துக்களால் பகுத்தறிவூட்டி சீர்திருத்தம் கொண்டு வந்தவர். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து எண்ணற்ற சமூகநலத் திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தியவர். கொடும் கொரோனா காலத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களை காட்டிலும் மருத்துவக் கட்டமைப்பில் முன்னோடியாக தமிழ்நாடு திகழ்ந்ததற்கு காரணம் கலைஞர். இன்றைக்கு சிறிய துறைகளில் இருந்து நீதித்துறை வரை தாழ்த்தப்பட்டவர்களும் கோலோச்ச முடிகிறதென்றால், அதற்கு காரணம் கலைஞர் கொண்டுவந்த சமூகநீதி திட்டங்கள். அப்பேர்ப்பட்ட கலைஞருக்கு நாங்கள் நினைவிடம் கட்டுவோம். அரசு விழாவும் நடத்துவோம்.

Advertisement