dinamalar telegram
Advertisement

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

Share
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பெங்கல் திருநாளை முன்னிட்டு பல இடங்களில் ஜல்லிக்கட்டு விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். உலக புகழ்ப்பெற்ற இவ்விழாவை காண, வெளிநாட்டு பார்வையாளர்களும் வருகைப்புரிவர். இந்நிலையில், ஜல்லிக்கட்டில் நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த சேஷன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‛ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்க கூடாது,' என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் என கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும் எனவும், பொய் சான்றிதழ் அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்துக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்றும் மாடுகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையை தவிர்க்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    பசுவதை சரி என்று யார் சொன்னார்கள்?

  • R. Vidya Sagar - Chennai,இந்தியா

    இதில் சட்ட சம்பந்தமாக எதுவும் இல்லையே?

  • mrsethuraman - Bangalore,இந்தியா

    ஜல்லிக்கட்டிற்க்கு தேவையில்லாத அதிகப்படியான முக்கியத்துவத்தை தந்து கொண்டிருக்கிறோம் .கிராமத்தில் விளையாடும் அந்த காலத்து விளையாட்டிற்காக உயர் நீதி மன்ற அளவில் வழக்கு நடப்பது சரியாக படவில்லை.

  • R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா

    தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தால் மாட்டுவண்டிகளை வைத்து ரேக்ளா ரேசும் நடக்கும் அதில் கலந்து கொல்லப்போகும் மாடுகள் எந்தவகை மாடுகள் என்று தெரியவில்லை, எல்லா காளை மாடுகளும் நாட்டுமாடுகளா இல்லை காட்டுமாடுகளா என்று தெரியவில்லை இல்லை வீட்டில் பயன்படுத்தப்படும் மாடுகளா என்று தெரியவில்லை, ஜல்லிக்கட்டு போட்டி, ரேக்ளா ரேஸ் நடத்தி மாட்டுக்கு ஏதோதோ தந்து நுரைதப்பி ஒருசில மாடுகள் காயப்படுத்தியும், காயம்பட்டும் ஓடும் அதுபோல் ஒடுவதைவிட வைரஸ் நோய் தொற்று பரவும் காலத்தில் அதிகம் கூட்டம் கூடாமலும் ஜல்லிக்கட்டு போட்டியை பேசாமல் நடத்தாமலும் நிறுத்திவைக்கலாம்.R.Kumaresan. ஏதோ வைரஸ் நோய் பரவுவது குறைந்திருந்தால் தமிழ்நாட்டில் mask போடுவதை நிறுத்திவைக்கலாம்.R.Kumaresan.

  • அப்புசாமி -

    அப்படியே நாட்டு மனுசங்க மட்டுதான் அனுமதி. தார்பாச்சி கடிய வேட்டியோடதான் மாடு பிடிக்கணும்னு சொல்லுங்க எசமான். இந்த டீசர்ட், நிக்கர், ஜெர்சி போட்டுக்கிட்டு களம் இறங்கத் தடை விதியுங்க. நாங்களும் சிரிச்சு எம்புட்டு நாளாச்சு.

Advertisement