dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்

Share
சென்னை: தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையில் திறக்கப்பட்டன. கல்லூரிகளில் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவியதன் காரணமாக மார்ச்சில் பள்ளிகளுக்கும், பின்னர் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஒரு மாதமாக கொரோனா தொற்று குறைந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் இன்று(செப்.,1) திறக்கப்பட்டன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும், முதல்கட்டமாக நேரடி வகுப்புகள் துவங்கின.


அதேபோல், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு, மாணவர்கள் உற்சாகமாக வந்தனர்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News


பள்ளி, கல்லூரி வளாகங்கள் முழுக்க கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டன. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். மாணவர்களின் வசதிக்காக அரசு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. சீருடையுடன் வரும் மாணவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.


புதுச்சேரியிலும் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Anandhan - puducherry,இந்தியா

    பள்ளிகள் திறந்ததற்கு நன்றி. புதுவை மாநிலம் புராண சிங்குபாளையம் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலை பள்ளியில் கிடடதட்ட 800 மானவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இன்று பள்ளி திறந்து வகுப்புகள் நடைபெற தொடங்கி உள்ளது. ஆனால் மாணவர்கள் வந்து செல்ல சரியான போக்குவரத்து வசதி இல்லை. அரசு சார்பில் இயக்கம் பேருந்துகளும் இயக்கப் படவில்லை. தனியார் பேருந்துகளும் மதகடிபட்டு வரை மட்டுமே இயக்கப் படுகிறது. மதகடிபட்டில் இருந்து புராணசிங்கு பாளையம் செல்ல பல மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகிறார்கள். இன்று மதியம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு பல மாணவர்கள் நடந்து சென்றனர். எனவே மதகடிபட்டுடன் திரும்பும் பேருந்துகள் திருக்கனுர் வரை இயக்கப்படவேண்டும்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    நுழைவு வாயில் நகரத்தந்தை சொந்த செலவில் கட்டி கொடுத்தாரா

  • Amutha - Chennai,இந்தியா

    👆NO SOCIAL DISTANCE , NO FACE MASK, This photo is sufficient to Prove that Vivid 19 could spread among students and to others easily.

Advertisement