dinamalar telegram
Advertisement

சமையல் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

Share
சென்னை: வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு, 'சிலிண்டர்' விலை, 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் சிலிண்டர் விலை ரூ.900ஐ கடந்துள்ளது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை மாற்றம் செய்யப்படுகின்றன. வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைக்கொண்ட சிலிண்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி 610 ரூபாயாக இருந்தது. அதன்பிறகு, படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் சிலிண்டர் விலை ரூ.900.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் சமையல் சிலிண்டர் ரூ.285 உயர்ந்துள்ளது. இதேபோல் வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் ரூ.75 உயர்ந்து ரூ.1,831க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (34)

  • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

    பிஜேபி... அல்லக்கைங்க, நொள்ளக்கைங்க ஒருத்தனையும் காணோம்... அப்படியே வந்தாலும், காங்கிரஸ் ஆட்சியிலதான் ஏத்துனாங்க...ன்னு கம்பி கட்ற கதையெல்லாம் சொல்வானுங்க...

  • Shiva -

    If this is the trend then how can the poor

  • அப்புசாமி -

    மக்கள் உ.பி தேர்தலில் முதல் ஆப்பு வைக்கப் போறாங்க. கொஞ்ச கொஞ்சமா ஏத்தி கடுக்காய் வைத்தியம் செய்யறாங்களாம்.

  • R Ravikumar - chennai ,இந்தியா

    நாங்கள் இன்றும் விறகு வைத்து சமையல் செய்து கொண்டு இருக்கிறோம் .சிலிண்டர் இணைப்பு இருந்தும் ... இது போன்று நடக்கும் என்று தெரியும் . பாதி சமையல் விறகில் தான் . ஓரளவிற்கு சம்பாத்தியம் இருந்தாலும் எனது தாயும் , மனைவியும் இப்படி மிச்சம் செய்கிறார்கள் ( ஒற்று கொள்ளவில்லை ) . வீட்டில் மரங்கள் நிறைய உண்டு ,, அடுக்கு மாடியில் வாழ்பவர்கள் வேறு வழியில்லை . இந்த மரங்கள் மற்றும் கார்பன் கழிவுகள் தான் இந்த கச்சா எண்ணையாக வாயுவாக மாறுகிறது என்றால் .. விறகு உபயோகித்து இயந்திரம் மூலம் எரிக்கும் தொழில்நுட்பம் நமது காசை மிச்சம் செய்யும் . ஆனால் அரசாங்கம் தடை செய்யும் என்று நினைக்கிறேன் . மின்சாரம் தயாரிக்க புகை அனுமதிக்கும் அரசாங்கம் நம்மை தடை செய்யும் .. என்ன செய்வது ? சகித்து கொண்டு பணம் சம்பாதிக்க முயற்சி செய்ய வேண்டியது தான் .

  • R Ravikumar - chennai ,இந்தியா

    சிலிண்டர் இணைப்பு இருந்தும்.. நாங்கள் இன்றும் விறகு வைத்து சமையல் செய்து கொண்டு இருக்கிறோம் .. இது போன்று நடக்கும் என்று தெரியும். பாதி சமையல் விறகில் தான். ஓரளவிற்கு சம்பாத்தியம் இருந்தாலும் எனது தாயும், மனைவியும் இப்படி மிச்சம் செய்கிறார்கள் (ஒற்று கொள்ளவில்லை). வீட்டில் மரங்கள் நிறைய உண்டு, அடுக்கு மாடியில் வாழ்பவர்கள் வேறு வழியில்லை. இந்த மரங்கள் மற்றும் கார்பன் கழிவுகள் தான் இந்த கச்சா எண்ணையாக வாயுவாக மாறுகிறது என்றால்.. விறகு உபயோகித்து இயந்திரம் மூலம் எரிக்கும் தொழில்நுட்பம் நமது காசை மிச்சம் செய்யும் . ஆனால் அரசாங்கம் தடை செய்யும் என்று நினைக்கிறேன் . மின்சாரம் தயாரிக்க புகை அனுமதிக்கும் அரசாங்கம் நம்மை தடை செய்யும்.. என்ன செய்வது ? சகித்து கொண்டு பணம் சம்பாதிக்க முயற்சி செய்ய வேண்டியது தான் .

Advertisement