dinamalar telegram
Advertisement

கோடநாடு வழக்கில் பழனிசாமியை சிக்க வைக்க சதி; வீடியோ ஆதாரம் வெளியிட்ட அதிமுக

Share
சென்னை: கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான சையன், மனோஜ் மற்றும் பத்திரிகையாளர் பிரதீப் ஆகியோர், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமியை சிக்க வைப்பது பற்றி பேசிய 'வீடியோ' ஆதாரம் வெளியாகி உள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே, கோடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் பங்களா உள்ளது. இதில், 2017 ஏப்., 24ல், காவலாளி ஓம் பகதுார் என்பவர் கொல்லப்பட்டு, கொள்ளை நடந்தது. இந்த வழக்கில், கேரளாவைச் சேர்ந்த சையன், மனோஜ் உள்ளிட்டோர் கைதாகி, ஜாமினில் உள்ளனர். இவர்களிடம் மீண்டும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, இந்த வழக்கில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடப்பதாக, சட்டசபையில் முன்னாள் முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சட்டசபை முன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இந்நிலையில், கோடநாடு காவலாளி கொலை வழக்கில், பழனிசாமியை சிக்க வைக்க, சையன், மனோஜ் மற்றும் பத்திரிகையாளர் பிரதீப் ஆகியோர் நடத்திய உரையாடல் வீடியோ, சமூக வலைதளமான 'டுவிட்டரில்' நேற்று அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (70)

  • RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ

    கோர்ட்டில் காட்டி பார்க்கலாம்

  • Visu Iyer - chennai,இந்தியா

    ஆஸ்பத்திரி சிகிச்சையில் அம்மா இட்லி சாப்பிட்ட வீடியோ கூட இவர்கள் தான் போட்டார்கள்.. என்பதை தான் இந்த செய்தி நினைவு படுத்து கிறது

  • Srinivas.... - Chennai,இந்தியா

    இதுக்கெல்லாம் பீசப்பி துணைபோயிருக்கானே அதை என்னன்னு சொல்ல? அவனுங்க கும்பல் மெகா கொள்ளைக்கும்பல் என்பதற்கு வேறு ஆதாரம் வேணுமா.

  • Srinivas.... - Chennai,இந்தியா

    இதானாடா வெட்டிநடை?

  • Srinivas.... - Chennai,இந்தியா

    .இதெல்லாம் பெரிய விஷயமா....

Advertisement