dinamalar telegram
Advertisement

எங்களின் நிலை பூஜியம்: ஆப்கன் எம்.பி., கண்ணீர்

Share
புதுடில்லி: ‛‛ஆப்கனில் அனைத்தும் முடிந்துவிட்டது; எங்களின் நிலை பூஜியம்,'' என டில்லி வந்த ஆப்கன் எம்.பி., கூறினார்.

இந்திய விமானப்படையினரால் மீட்கப்பட்டு டில்லி அழைத்து வரப்பட்ட எம்.பி.,க்களில் ஒருவரான நரேந்தர் சிங் கல்சா கூறுகையில், எனக்கு அழுகை வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கனை மறுகட்டமைக்கும் பணியில் ஈடுபட்டோம். தற்போது அனைத்தும் முடிந்துவிட்டது. எங்களின் நிலை பூஜியம் தான். எங்களை மீட்டு வந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். விமான நிலையத்திற்கு தொடர்ந்து வந்தோம். தலிபான்கள் கொடூரமானவர்கள். காட்டுமிராண்டிகள். அங்கு நாங்கள் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. விமான நிலையத்திலும் கூட ஏன் செல்கிறீர்கள்?. போகாதீர்கள்? என்றனர். இவ்வாறு எனக்கூறினார்.
திபென் ஷெர்பா என்பவர் கூறுகையில், ‛‛ஆப்கன் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டுகளுக்கு மத்தியில் மக்கள் வாழ்கின்றனர். தலிபான்களை நம்ப முடியாது. அவர்கள் மக்களை தாக்குகின்றனர். பயத்துடனேயே அங்கு வாழ வேண்டி உள்ளது,'' என தெரிவித்தார்.

போலியோ தடுப்பூசிஇந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவசமாக போலியோ தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். அது குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (15)

 • Vivekanandan Mahalingam - chennai,இந்தியா

  ஆப்கானில் நடப்பது அவர்கள் உள் நாட்டு விவகாரம் . ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம் தர கூடாது அவர்கள் சீன அல்லது பாகிஸ்தான் அல்லது ரஷ்யா விற்கு செல்லட்டும்

 • Kumar - Madurai,இந்தியா

  அதான் இந்தியா வந்தாச்சுல. அப்பறம் இங்கே பல மத சார்பற்ற போராளீஸ் கூட்டங்கள் அதிகம் உள்ளனர். அவர்களை நீங்கள் ஆதரித்து,மோடி ஒழிகனு கூப்பாடு போட்டால் போதும் பூஜ்யம் பல கோடிகளை தாண்டி பணம் சம்பாதிக்க முடியும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  இந்தியாவில் சுதந்திரம் பற்றி பேசுபவர்களை ஆப்கானிஸ்தான் அனுப்பிவிடவும். அப்போது புரியும் இங்கு வீர வசனம் பேசுபவர்களுக்கு.

 • NARAS - karaikkal,ஐக்கிய அரபு நாடுகள்

  தலிபான் யாரு அவங்க வரலாறு நாட்டை கைப்பற்றவேண்டிய அவசியம் என்ன ஓர் கட்டுரை வெளியிடுங்கள்

 • elakkumanan - Naifaru,மாலத்தீவு

  விடுங்க பாஸூ....எங்க ஊரில் கூட முப்பத்தெட்டு டோக்கன் ஸிரோ வாகத்தான் இருக்கு...அதுக்கு அவங்க கவலையா படுறாங்க...ஏதோ காண்ட்ராக்ட், டெண்டர் எடுத்தோமா நூறு இருநூறு கோடி கமிஷன் பாத்தோமா, பெரும்பான்மையை கழுவி ஊத்துனோமா மோடி ஒழிக கோசம் போட்டோமா ன்னு இருக்காங்க.....அத பார்த்து தொழில் படிங்க..........என்ன பாஸூ, பிழைக்க தெரியாத ஆளா இருக்கீங்க......

Advertisement