dinamalar telegram
Advertisement

ஊரக வேலை திட்டத்தில் ரூ.935 கோடி முறைகேடு: தணிக்கையில் திடுக்!

Share
புதுடில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அமலாக்கத்தில் ரூ.935 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய தணிக்கையில் திடுக் தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2.65 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில், கடந்த 4 ஆண்டுகால (2017-18 முதல்) ஊரக வேலைதிட்ட அமலாக்கம் பற்றி தணிக்கை நடத்தப்பட்டது. 2017-18ம் நிதி ஆண்டில் மத்தியஅரசு இந்த திட்டத்துக்கு ரூ.55,659 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2020-21ம் நிதி ஆண்டில் ரூ.1,10,355 கோடியாக உயர்ந்துள்ளது.
மொத்த நிதி ஒதுக்கீடு அதிகரித்து வந்த நிலையில் ரூ.935 கோடி நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது தணிக்கையில் தெரியவந்துள்ளது. லஞ்சம் மற்றும் உயிருடன் இல்லாதவர்களுக்கு பணம் அளித்ததாக கணக்கு காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதுதவிர அதிக விலையில் பொருட்களை கொள்முதல் செய்ததும் தெரியவந்துள்ளது. இதில், ரூ.12.5 கோடி அளவிலான தொகை மட்டுமே வசூலாகியுள்ளது. இது மொத்த தொகையில் 1.34% ஆகும்.

தமிழகத்தில் மிக அதிகளவாக ரூ.245 கோடி முறைகேடு நடந்துள்ளது. இதில், 0.85% தொகை அதாவது ரூ.2.07 கோடி மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தணிக்கையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டும், 2 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (37)

  • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

    இந்த தேவையற்ற திட்டத்தால் பண செலவே அன்றி எந்த ஒரு (சொல்லிக்கொள்ளும்படியான) தரமான, அத்தியாவசியமான வேலைகளும் நடப்பதில்லை என்பது தான் உண்மை.

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    ஊழல் இல்லாத துறைக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். ஊழல் தங்கப் பரிசு தமிழகத்துக்கு நிரந்தரம். எதிலேதான் இல்லை - எங்கேதானில்லை. சாகா வரம்பெற்ற ஊழலே நீ என்று.......?

  • John Miller - Hamilton,பெர்முடா

    மத்திய அரசினால் அறிவிக்க பட்டு மாநிலங்களால் நிறைவேற்றப்படும் அணைத்து திட்டம்களும் ஊழல் நிறைந்ததுதான். (அனைவருக்கும் வீடு, பசுமை வீடுகள், சரக்கு கிட்டங்கைகள், விஷசாயிகளுக்கு வருமானம் என பலவற்றை சொல்லலாம்.)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    தமிழகம் முதலிடம். காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்.

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே வேலை.... அதுவும் வேலை செய்வதாக போக்கு காட்டிவிட்டு.... மரத்தடியில் உட்கார்ந்து தாயம் ஆடு புலி ஆட்டம் பல்லாங்குழி பாண்டி விளையாடுவது..... அப்புறம் சாப்பாடு.... தூக்கம்.... ஊர் வம்பு பேசுதல்.... இப்படியாகத் தான் செல்கிறது..... பெரும்பாலான ஊராட்சிகளில்..... மொத்தமாக இந்த திட்டத்தையே ரத்து செய்து விடலாம்...... பணமாவது மிச்சமாகும்.....

Advertisement