dinamalar telegram
Advertisement

விநாயகர் ஊர்வலம் தடுத்தால் போராட்டம் வெடிக்கும்:. ஹிந்து முன்னணி எச்சரிக்கை

Share
திண்டுக்கல்--''விநாயகர் சிலை ஊர்வலத்தை அரசு தடுத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்,'' என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.



திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:செப்., 10ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. தமிழகம் முழுதும் 1.25 லட்சம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, ஊர்வலமாக எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்.விநாயகர் சிலை ஊர்வலத்தை அரசு தடுத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அரசுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்.



விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும். கடந்த 100 நாட்களில், தி.மு.க., அரசு ஒன்றுமே செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

  • S. Narayanan - Chennai,இந்தியா

    களிமண் பொம்மை செய்பவர்கள் வருடத்தில் இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே உழைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். கொரோனா தொற்றால் வாழ்கையை இழந்த அந்த தொழிலாளர்களுக்கு அரசு உடனே உதவிக்கரம் நீட்டவெண்டும். அவர்கள் வாழ்வில் சாதி மதம் வேறுபாடு காணாமல் அவர்களுக்கு உதவவேண்டும்.

  • E. RAJAVELU - Chennai,இந்தியா

    ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவே கூடாது.

  • SUBBU - MADURAI,இந்தியா

    வெறும் வாய் சவடால் போதாது.

  • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

    இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதற்க்குல் அலப்பறை ஆரம்பித்து விட்டது

  • Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்

    வன்முறையை தூண்டுவதாக தெரிகிறது

Advertisement