Load Image
Advertisement

உடல் உறுப்பு தானம் செய்ய வாருங்களேன்...!

  உடல் உறுப்பு தானம் செய்ய வாருங்களேன்...!
ADVERTISEMENT
''பத்தில் இருவருக்கு மட்டுமே, தேவையான உறுப்பு கிடைக்கிறது. மாற்று உறுப்பு கிடைக்காமல், பலரும் இறந்து விடுகின்றனர். இந்தியாவில்தான் மிக மிக குறைவான அளவில், உடல் உறுப்பு தானம் செய்யப்படுகிறது,'' என்று ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த்பரதன் கூறினார்.

மருத்துவமனையில் நடந்த உலக உடல் உறுப்புகள் தான நிகழ்ச்சியில், என்.எஸ்.எஸ்.,மற்றும் என்.சி.சி.,மாணவர்கள் 200 பேர், உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கான, உறுதிமொழி படிவங்களை, எஸ்.என்.ஆர்.,சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமியிடம் வழங்கினர்.அதனை தொடர்ந்து, ஆன்லைன் வழியில், நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த்பரதன் பேசியதாவது:இன்றைய சூழலில், இருதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கிய உடல் உறுப்புகள் பாதித்து, மாற்று உறுப்புக்காக பலர் காத்திருக்கின்றனர். அதே சமயம், தானம் செய்வோரின் எண்ணிக்கைதான், மிகவும் குறைவாக உள்ளது. 10ல் இருவருக்கு மட்டுமே, தேவையான உறுப்பு கிடைக்கிறது. மாற்று உறுப்பு கிடைக்காமல், பலரும் இறந்து விடுகின்றனர். இந்தியாவில்தான் மிக மிக குறைவான அளவில், உடல் உறுப்பு தானம் செய்யப்படுகிறது.தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்தாலே, சிகிச்சைக்கான கட்டணத்தை, பாதியாக குறைக்க முடியும்.


நுரையீரல், இருதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றுக்கு பாதிப்புகள் வராமல் தடுப்பது குறித்தும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.ஏனெனில், ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மட்டும், கல்லீரலுக்காக சுமார் 20 பேர், சிறுநீரகத்திற்காக 40 பேர், மாற்று உறுப்பு வேண்டி காத்திருக்கின்றனர். மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்துதான், முக்கிய உறுப்புகளை எடுக்க முடியும். அதே சமயம், இறந்தவரின் உடலில் இருந்து, கண் மற்றும் தோல் ஆகிய உறுப்புகள் மட்டுமே பெற முடியும். இனிவரும் காலங்களில், உடல் உறுப்பு தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் சுகுமாரன், கலை அறிவியல் கல்லுாரி செயலர் சிவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement