சென்னை: அரசு திவாலாக உள்ளதால் வரிகளை உயர்த்தியே ஆக வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். வருவாய் இல்லாமல் அரசாங்கம் திவாலாக உள்ளது. எனவே வரியை உயர்த்தியே ஆக வேண்டும். முன்னாள் அமைச்சர் பாண்டியராஜானுக்கு பொருளாதாரம் தெரியாது. வெள்ளை அறிக்கை சம்பந்தமாக வாய்க்கு வந்தபடி உளறிக்கொண்டு இருக்கிறார். வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கும் தேர்தல் அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. 110 விதியில் ஜெயலலிதா, பழனிச்சாமி அறிவித்த திட்டங்களின் நிலை குறித்து எனக்கே இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. முன்னாள் முதல்வர் பழனிச்சாமி கோர்ட்டில் ஆஜராகி சொல்வது போல, வருவாய் பற்றாக்குறை இருந்தது என்று ஒப்புக்கொண்டு விட்டார். ஜெயலலிதா அறிவித்த தொலைநோக்கு பார்வை திட்டம் - 2023 நிறைவேறவில்லை. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பொறுப்பற்ற ஆட்சி நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புலி என்று தனக்குத்தானே அறிவித்துக்கொண்ட பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. லேமேன் பிரதர்ஸ் மாதிரி, தமிழகத்தை திவால் ஆக்காம பதவி விலகமாட்டாரு....
வரியை உயர்த்தினாள் இருக்கும் தொழிலும் நாசம் ஆகிவிடும் .வரியை உயர்த்தி, உழைப்பவன் வியரவையை உழைக்காமல் தூங்கும் நூறுநாள தொழிலார்கள் இடம் கொடுக்கவும் மற்றும் இலவசங்களுக்கு கொடுக்கவும் .இதுவா உங்கள் திறமை. ஓட்டுக்காக கொடுக்கும் இலவசங்களை நிறுத்தி நல்ல பயனுள்ள வழிகளை கண்டறிந்து புதிய தொழில்களை ஊக்குவிக்கவும் .ஸ்டார்ட்டுப்கலை ஊக்குவிக்கவும் .சமுதாயத்தில் பின்தங்கியவற்குலகு தொழில் தொடங்க ஊக்குவிக்கவும் .உங்கள் lehman பிரோதெரஸ் அண்ட் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் அறிவு உதவுமா ???
நிதி நிலையே தெரியாமல் இலவசங்களை தேர்தலில் அறிக்கையில் அள்ளி விடுவது மக்களுக்கு செய்யும் துரோகம் . ஏற்கனவே வெளியிட்ட வெள்ளை அறிக்கை போல அடுத்த தேர்தலுக்கு முன்னும் இதே மாதிரி வெளியிட்டால் நலம் . இலவசங்களால் அதிகம் லாபமடைந்தது இரு அரசியல் கட்சிகள் மட்டுமே.
இலவசங்களை முறை படுத்தவும்..
வருவாய் குறைந்து விட்டதால் இனி, தமிழ் நாடு அரசு இனிமேல் (வருவாய்)குன்றிய அரசு என அழைக்கப்படும்😁
புலி என்று தனக்குத்தானே அறிவித்துக்கொண்ட பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. லேமேன் பிரதர்ஸ் மாதிரி, தமிழகத்தை திவால் ஆக்காம பதவி விலகமாட்டாரு....