dinamalar telegram
Advertisement

வேலுமணிக்கு அடுத்து ஜெயகுமார் மீது நடவடிக்கை: அமைச்சர் நாசர் பரபரப்பு பேட்டி

Share
சென்னை: ''முன்னாள் அமைச்சர் வேலுமணியை தொடர்ந்து, ஜெயகுமார் மீதும் நடவடிக்கை பாயும்,'' என, பால் வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவையின், இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை, வளசரவாக்கத்தில், இலவச மருத்துவ முகாம் மற்றும் ஏழை எளியோருக்கு, 5 கிலோ அரிசி மற்றும் அன்னதானம் வழங்கும் விழா, நேற்று காலை நடந்தது.இந்த நிகழ்ச்சியில், பால் வளத்துறை அமைச்சர் நாசர், மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவை தலைவர் ஜோதிகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

நலத் திட்ட உதவிகளை வழங்கி, அமைச்சர் நாசர் அளித்த பேட்டி: நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது, வெள்ளை அறிக்கை வெளியிடுமாறுஅறிவுறுத்தினோம். ஆனால், அதை, அ.தி.மு.க., அரசு மறுத்தது. தற்போது, வெளிப்படைதன்மையுடன் ஆட்சி செய்யும் முதல்வர் ஸ்டாலின், சிறப்பான முறையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதற்கு, அனைத்து மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் வேலுமணியை அடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீதும் நடவடிக்கை பாயும். அவர்கள் மீது தவறு இல்லை என்றால், நிரூபித்து வெளியே வரட்டும். அவர்கள், முறைகேடாக பல்லாயிரம் கோடி ரூபாய் சேர்த்துள்ளனர்; அதனால் பதறுகின்றனர்.

ராஜேந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு, 1.5 டன் ஆவின் ஸ்வீட் எடுத்து சென்ற விவகாரம் குறித்து, முறையான விசாரணை நடந்து வருகிறது. அ.தி.மு.க., அரசு, 10 ஆண்டுகளில், தமிழகத்தை கடனில் தள்ளிவிட்டுஉள்ளது.

விவசாயியிடம் லிட்டர், 32 ரூபாய்க்கு பால் கொள்முதல் செய்கிறோம். அதை, 42 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இதில், மொத்த வியாபாரிகளுக்கு லிட்டருக்கு, 1.50 ரூபாயும், சில்லரை வியாபாரிகளுக்கு, 75 காசும் அளிக்கிறோம். தற்போது, 80 ஆயிரம் போலி பால் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

காற்றில் பறந்தது!நிகழ்ச்சியின் போது, கொரோனா விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. சிலருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பின், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., அங்கிருந்து சென்றனர்.இதையடுத்து, 5 கிலோ அரிசி வாங்கவும், அன்னதானம் பெறவும், மக்கள் சமூக இடைவெளி இன்றி திரண்டனர். வெயில் தாங்காமல், 10க்கும் மேற்பட்டவர்கள், அருகில் இருந்த ஏ.டி.எம்., மையத்தில் புகுந்தனர். போலீசார் இருந்தும், கொரோனா விதிமுறைகள் காற்றில் பறந்தன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (36)

 • Mahalakshmi - Sivakasi,இந்தியா

  டெண்டர் குற்றச்சாட்டு சுமத்த திமுகவிற்கு தகுதி இருக்கிறதா???

 • Mahalakshmi - Sivakasi,இந்தியா

  திமுகவிற்கு தகுதி இருக்கிறதா?

 • Mahalakshmi - Sivakasi,இந்தியா

  மக்களை திசைதிருப்பி பரபரப்பாக பேச வைத்து 5வருடங்களை முடித்து விடுவார்கள். தங்களது குடும்பங்கள் எடுக்க வேண்டிய டெண்டர் களை 10வருடங்களாக இவர்கள் எடுத்திருக்கிறார்களே என்ற பொறாமை தான் காரணம். கருணாநிதி குடும்பம் எப்படி குறுகிய காலத்திற்குள் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து முன்னுக்கு வந்தார்களோ. குற்றம் சாட்டுக்கள். ஆனால் அதற்குரிய தகுதி திமுகவிற்கு இருக்கிறதா???

 • Hari - chennai,இந்தியா

  உங்களை இன்னுமா இந்த தமிழன் நம்பி ஒட்டு போடுகிறான் ?

 • duruvasar - indraprastham,இந்தியா

  It is interesting to note some of the people famous for their cartoon characters like names make funny and senseless comments. In the process they get exposed themselves badly as they lack basics on the suject on which they think they have put in their whole expertise to counter tthose wrote the facts..For example one such comment is that Modi is giving free gas connection out of the money he generated by raising price on petrol and diesel . No one with an iota of basic knowledge will dare to make such comments. Funds are allocated for such Social welfare schemes in the budget and not given out of regular income. Probably this person is influenced by the economics being practiced by hiis favourite party in the past and at present. The kind of abuses and filthy languages used to criticize on those who makes comments which is not to thier liking is unprin.The funny thing here is that while they do that , simultaneously will preach, to those whom they are abusing , to be tolerant, dignified, and to sick to the facts. True Dravidian culture indeed.

Advertisement