Load Image
Advertisement

கோவிலில் செருப்பு அணிந்த பெண் டாக்டரிடம் வாக்குவாதம்

  கோவிலில் செருப்பு அணிந்த பெண் டாக்டரிடம் வாக்குவாதம்
ADVERTISEMENT
வேலுார்:கொரோனா தடுப்பூசி முகாம் நடந்த கோவிலில், செருப்பு அணிந்து பெண் டாக்டர்உட்கார்ந்ததால், பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


வேலுார் அருகே, பொய்கை பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் தடுப்பூசி முகாம் நடந்தது.வேலுார் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த ரெஜினா என்ற பெண் டாக்டர் செருப்பு அணிந்து, கோவில் கருவறை முன் அமர்ந்திருந்தார்.தடுப்பூசி போட வந்தவர்கள் மற்றும் பக்தர்கள், செருப்பை கழற்றி விட்டு வரும்படி அவரிடம் கூறினர்.அதற்கு டாக்டர், 'இங்கு செருப்பு அணிந்து வர வேண்டாம் என்று போர்டு வைத்துள்ளனரா' என, கேட்டுள்ளார்.


இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. டாக்டரை வெளியேற்றினால் தான், தடுப்பூசி போட்டுக் கொள்வோம் என அங்கு வந்தவர்கள் கூறினர்.இதனால், முகாமை விட்டு டாக்டர் ரெஜினா வெளியேறினார். பின், டாக்டர் ரெஜினா செய்த தவறுக்கு, நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அங்கிருந்த செவிலியர்கள் கூறியதால், மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.


வாசகர் கருத்து (33)

  • சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்

    உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பல காற்றும் கல்லாதார் அறிவிலா தார் WHEN IN ROME, DO AS THE ROMANS DO

  • Balamurali Srinivasan - Chennai,இந்தியா

    அந்த மக்களை பாராட்ட வேண்டும். இந்த அறிவில்லாத மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாதவர்களின் ஆட்டம் சமீப காலங்களில் கொஞ்சம் அதிகமாகத்தான் ஆகி விட்டது.இனிமேல் மக்கள் ஆங்காங்கே முழித்து கொண்டால் தான் நம்மக்கு பாதுகாப்பு.

  • Korkaivendhan - madurai,இந்தியா

    ஒரு சில இது போன்ற திமிர் பிடித்தவர்களால் தான் மதத்திற்கு இழுக்கு....எம்மதமும் சம்மதம் என்று மருத்துவ சேவை செய்ய வேண்டும் சகோதரியே.....

  • sankar - ghala,ஓமன்

    அரசாங்கம் அவர்களின் பக்கம் இருக்கும் பொது செருப்பு அனியது என்ன , உன்னை செருப்பால் அடித்தால் கூட ஆஸ்ச்சரிய படுவதற்கு இல்லை .

  • INDIAN Kumar - chennai,இந்தியா

    மற்ற மதங்களையும் மதிக்க தெரிந்தவர்கள் தான் உண்மையான மனிதர்கள் , போலி மனிதர்கள் தண்டனையை பெறுவார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement