dinamalar telegram
Advertisement

வெண்கலம் வென்றார் லவ்லினா: குத்துச்சண்டையில் ஆறுதல்

Share
டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா (69 கி.கி.,) வெண்கலப் பதக்கம் வென்றார். அரையிறுதியில் 0-5 என, துருக்கி வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.

ஜப்பானில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பெண்களுக்கான குத்துச்சண்டை 'வெல்டர் வெயிட்' எடைப் பிரிவு (69 கிலோ) அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா, நடப்பு உலக சாம்பியன் துருக்கியின் புசனெஸ் சர்மெனெலி மோதினர். இதில் லவ்லினா 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இது, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கமானது. ஏற்கனவே பளுதுாக்குதலில் மீராபாய் சானு (வெள்ளி), பாட்மின்டனில் சிந்து (வெண்கலம்) பதக்கம் வென்றிருந்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

  • Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா

    உங்களின் வெற்றிக்கு எண்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்த ஒலிம்பிக்கில் தங்க மெடல் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • krishnan - salem,இந்தியா

    பதக்கம் வென்ற சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    பெரிய சாதனை தான்..பெண்கள் தான் பெருமை சேர்க்கிறார்கள்...இது வரை...

  • raja - Cotonou,பெனின்

    ஒரு ஆம்பிளை கூட இல்லையா பதக்கம் லிஸ்ட்ல ?

  • ஆரூர் ரங் -

    பாராட்டுக்கள்👍

Advertisement