ADVERTISEMENT
திருவள்ளூர் : ''கிறிஸ்தவ மக்களின் வலிமையான ஜெபத்தால் தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது,'' என, பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேசினார்.
திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள, அற்புத ஜெபகோபுரம் ஏ.ஜி., தேவாலயத்தின், 40ம் ஆண்டு துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேசியதாவது:
முன்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள், சிறுபான்மையினர் நலன் கருதி, பல்வேறு சீரிய திட்டங்களை கொண்டு வந்தனர். சிறுபான்மைருக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில் ஆட்சி செய்தனர். ஆனால், தற்போதைய மத்திய அரசின் ஏழு ஆண்டு கால ஆட்சியில், சிறுபான்மையினருக்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்டுள்ளன.
இதே ஜெபகூட்டத்தில் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என, மூவரும் உள்ளோம். இதுவே மத நல்லிணக்கம்; மத ஒற்றுமை. நம்நாட்டில் உள்ளவர்கள் பல்வேறு மொழிகள், மதங்களை சார்ந்து இருந்தாலும், அவர்களுக்குள் வேற்றுமை இல்லாமல் பழகி வருவதால், இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது. கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான், இன்று மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள, அற்புத ஜெபகோபுரம் ஏ.ஜி., தேவாலயத்தின், 40ம் ஆண்டு துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேசியதாவது:
முன்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள், சிறுபான்மையினர் நலன் கருதி, பல்வேறு சீரிய திட்டங்களை கொண்டு வந்தனர். சிறுபான்மைருக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில் ஆட்சி செய்தனர். ஆனால், தற்போதைய மத்திய அரசின் ஏழு ஆண்டு கால ஆட்சியில், சிறுபான்மையினருக்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்டுள்ளன.

தமிழர்கள் முட்டாள்கள், பழம்பெருமை மட்டுமே பேசும் வடிகட்டின அசடுகள். ஏதோ அறுபது வருடங்களுக்கு முன்னால் வந்த அரசுகள் செய்த நன்மைகளினால் இன்னும் வண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது