dinamalar telegram
Advertisement

புவனேஷ்வரில் 100% மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி சாதனை

Share
புவனேஷ்வர்: புவனேஷ்வரில் 18 வயதை கடந்த அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் இந்திய நகரம் என்னும் சாதனையை படைத்துள்ளது.

ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய நகரமானது. இதுதவிர புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு முதல் தவணை கோவிட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக புவனேஷ்வர் மாநகராட்சி உதவி கமிஷனர் அன்ஷுமன் ராத் கூறியதாவது:
கோவிட்-க்கு எதிராக 100 சதவீதம் மக்கள் தொகைக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதோடு புவனேஷ்வரில் உள்ள சுமார் ஒரு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஜூலை 31ம் தேதிக்குள் புவனேஷ்வரில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது என்று இலக்கு நிர்ணயித்தோம், அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட 9 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு 2வது தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தி விட்டோம். இதில் 31 ஆயிரம் சுகாதார ஊழியர்கள், 33 ஆயிரம் முன்களப் பணியாளர்கள், 18 முதல் 45 வயதுடையோர் 5.17 லட்சம் பேர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 3.2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஜூலை 30ம் தேதி வரை 18.35 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

100 சதவீதம் என்ற இலக்கை எட்ட நகரம் முழுதும் 55 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் 30 மையங்கள் இயக்கப்பட்டன. அதே போல் நடமாடும் தடுப்பூசி மையங்களும் நகரம் முழுதும் ஏற்படுத்தப்பட்டன. இது தவிர பள்ளிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக நோய் தடுப்பாற்றல் மையங்கள் 15 என்ற எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (23)

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    நவீன் பட்நாயக் என்றாலே சும்மாவா? மகா திறமை சாலி அல்லவா

  • Sathish - Coimbatore ,இந்தியா

    கேரளாவில் நிலைமை ரொம்ப மோசம். கொரோனா உற்பத்தி நிலையம் அங்கே இருக்கு. இங்க ஒருபக்கம் ஊசிபோட்டாலும் அங்கே கட்டுக்குள் இல்லாத காரணத்தால் நாட்டில் எல்லா பகுதிக்கும் பரவும் அபாயம் உள்ளது. முதன் முதலில் நம் நாட்டில் கொரோனா பரவியது கேரளாவில் இருந்து தான் என்பதை மறக்கவேண்டாம்.

  • Raj - ,

    It is just a city. Looks they focused just capital. Poor rural people 😪

  • B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா

    புவனேஸ்வர் நகரத்தில் 100% சதவீதம் தடுப்பூசி போடப்பட்டது என்று பெருமைப்படும் அதேவேளையில் புவனேஸ்வர் நகரத்தை உள்ளடக்கிய கோர்த்தா மாவட்டத்தில் தான் மாநிலத்திலேயே அதிகமாக 4000 பேருக்கு மேல் தொற்றுக்காக சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் இம்மாவட்டத்தில் 409 புதிய தொற்றும் 8 நபர்கள் இறப்பும் ஏற்பட்டு இருக்கிறது... தடுப்பூசி போடப்பட்டும் தொற்றும், மரணமும் ஏற்படுகிறதா என்பதை ஆராயவேண்டும்...

  • BALU - HOSUR,இந்தியா

    பிரதமர் மோடி அனைத்து இந்தியர்களுக்கும் தாயுள்ளத்தோடு தடுப்பு ஊசியை இலவசமாக அளித்தாலும் அதனை சிறப்பாக அர்ப்பணிப்புடன் தனது மாநில மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் ஒரிசா முதல்வரின் செயல்பாடும் அவரின் தாய்நாட்டுப் பற்றும் நிச்சயம் போற்றுதலுக்கு உரியவை. நம்நாடு இருக்கும் நிதிப் பற்றாக்குறையில் தனது மாநிலத்திற்கு புயல்நிவாரண நிதி வேண்டாம் என அவர் கூறியிருந்தது நாட்டின் நலனையும் தற்போதைய யதார்த்த தேவையையும் புரிந்து கொண்ட ஒரு தலைவருக்குரிய சிறந்த முன்னுதாரணம் திரு:நவின் பட்நாயக் அவர்கள்.பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாநிலமான ஒரிசா திரு:நவின் பட்நாயக்கை முதல்வராகக் கொண்டிருப்பது அம்மாநில மக்கள் செய்துள்ள புண்ணியமும் புத்திசாலித் தனமும் ஆகும்.பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறியுள்ள இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட தமிழக தமிழர்கள் தான் இலவசங்களுக்காக பிச்சை எடுத்து அலைகின்ற மனநிலை மிகவும் வேதணையானது.இது திராவிட கட்சிகளின் சாதணை வாழ்க தமிழ்ஜெய்ஹிந்த்

Advertisement