வாலிபர் மூளைச்சாவு; உடல் உறுப்புகள் தானம்
சேலம்: மூளைச்சாவு அடைந்த நாமக்கல் வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.
நாமக்கல், ராஜூவ் காந்தி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அஜீத்குமார், 25; பி.டெக்., படித்த இவர், பல்லடம், தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இரு ஆண்டுக்கு முன், தலைவாசலில் ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த அடிபட்டு குணமாகிவிட்டார். எனினும் அவ்வப்போது உபாதை ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். ஒரு வாரமாக, தலைவலியால் அவதிப்பட்டவர், கடந்த, 29ல் திடீரென மயக்கமாகி விட்டார். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம், ரத்தக்கட்டி அகற்றப்பட்டது. இருந்தும், ரத்த கசிவு அதிகமாகி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். மறுநாள், காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. ஒரு ஜோடி கண்கள்; சிறுநீரகம், கணையம், தோல் ஆகிய உறுப்புகள் பெறப்பட்டு, மாலை, 5:30 மணிக்கு, கோவை, சேலம் மருத்துவமனைக்கு தனித்தனியே அனுப்பப்பட்டன. அதற்காக, போலீசார் ஏற்பாட்டில், 'கிரீன் காரிடார்' உருவாக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!