Load Image
dinamalar telegram
Advertisement

பாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற வேண்டுமாம்: அமைச்சர் மருமகள் சர்ச்சை பேச்சு

Tamil News
ADVERTISEMENT
சென்னை: 'உலகில் எந்த மூலையில் எவனாக இருந்தாலும், பாதிரியார்களையும், சிஸ்டர்களையும் கைது செய்ய, போப்பிடம் அனுமதி பெற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்' என அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளும், திமுக எம்.எல்.ஏ., செந்தில்குமாரின் மனைவியுமான மெர்ஸி செந்தில்குமார், சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

பாதிரியார் ஸ்டேன் சாமிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடந்தது. இதில் கலந்து கொண்டு மெர்ஸி செந்தில்குமார் பேசியதாவது: பாதிரியார் ஸ்டேன் சாமியின் மரணத்திற்கு குரல் கொடுப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். ஒரு பாதிரியார் இறந்து விட்டார். அவருக்கு இப்போது குரல் கொடுக்கிறார்கள். நாளையும் எங்கோ ஓரிடத்தில், பாதிரியாரோ, சிஸ்டரோ போராடி கொண்டு தான் இருப்பார்கள்.Latest Tamil News
பாதிரியார்கள், சிஸ்டர்கள் வந்த பிறகே நமக்கு கல்வியும், பகுத்தறிவும் கிடைத்தது. உலகில் உள்ள பாதிரியார்களையும், சிஸ்டர்களையும், ஹூரோ, ஹூரோயின்களை போல பார்க்க வேண்டியது அவசியமானது. இந்த உலகில் எவனாக இருந்தாலும், பாதிரியாரையும், சிஸ்டரையும் கைது செய்ய வேண்டும் என்றால், வாடிகனில் உள்ள போப்பிடம் அனுமதி பெற வேண்டும் என ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசி உள்ளார். அவரது இந்த சர்ச்சை பேச்சு வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (280)

  • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

    மெர்சி அம்மணி ஒங்க பூப்பு கிட்ட சொல்லுங்க இந்தியாவில் இருப்பவர்கள் . ..குஷு போட்டுக்கொள்ளலாமா என்று?

  • S.Ganesan - Hosur,இந்தியா

    வாடிகன் ஒரு தம்மாத்தூண்டு நகரம். ஏதோ மரியாதைக்காக அதையும் ஒரு நாடாக கருதி , போப்பை அதன் தலைவர் என்றால் , இந்த அம்மா அவரை உலகத்திற்கே ஜனாதிபதி மாதிரி பேசுகிறது. எதுக்கு போப்பிடம் அனுமதி ? டைரக்ட் ஆக கடவுளிடம் போய் பெர்மிஸன் வாங்குங்களேன் என்று சொல்லுங்கம்மா

  • Gandhi - Chennai,இந்தியா

    மெர்ஸி செந்தில்குமார் அவர்களே , கனடாவில் உங்கள் கத்தோலிக்க பள்ளியில் பாதிரிகள் ஆயிரக்கணக்கான சிகப்பு இந்திய குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து புதைத்ததற்கு போப்பை முதலில் மன்னிப்பு கேட்டச்சொல்லுங்கள்.

  • Dr.Arun - Madurai,இந்தியா

    திருமதி. செந்தில்குமார் சொல்லியது நூற்றிற்கு நுறு உண்மை என்பது இந்திய வரலாற்றையும் சமூக மாற்றத்தையும் படித்தவர்களுக்கு நன்கு புரியும். ஒரு சாரருக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் கல்வி, மருத்துவம், சமூகநீதி போன்றவற்றை நடைமுறைப்படுத்தியது இந்த நிறுவனங்களே.

  • ponssasi - chennai,இந்தியா

    எவனாக இருந்தாலும் எனும் வார்த்தை இன்றை முதல்வரைதான் குறிக்கிறது. முதல்வரை அவதூறாக பேசியதாக ஏன் இவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது.

Advertisement