dinamalar telegram
Advertisement

அரசியலுக்கு சற்று ஓய்வு; பாண்டியராஜன் முடிவு

Share
சென்னை : ''அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, தொழிலில் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன்,'' என, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

அ.தி.மு.க., ஆட்சியில், பள்ளி கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தவர், பாண்டியராஜன். இவர், அரசியலுக்கு வருவதற்கு முன், 'மாபா' என்ற பெயரில், மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். அமைச்சரான பின், தன் பதவிகளை, மற்றவர்களிடம் ஒப்படைத்து இருந்தார்.

சமீபத்திய சட்டசபை தேர்தலில், ஆவடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு, கட்சியினர் உள்ளடியால் தோல்வியை தழுவினார். இதனால், மிகுந்த விரக்தியில் உள்ளார். தற்போது, அ.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு துணை செயலராகவும் உள்ளார். இவர், மாபா மற்றும் சி.எல்., மனிதவள நிறுவனத்தின் தலைவராக, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின், அவர் கூறியதாவது:'மாபா' மனிதவள நிறுவனம், ஒரு காலத்தில், இந்தியாவின் முதன்மை நிறுவனமாக இருந்தது. அமைச்சராக பொறுப்பேற்றதால், நிறுவன பணிகளில் கவனம் செலுத்தாமல், தீவிர அரசியலில் மட்டுமே ஈடுபட்டேன். தற்போது, தொழிலை கவனிக்க முடிவு செய்து, பொறுப்பேற்று உள்ளேன். அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு தொழிலில் அதிக கவனம் செலுத்த உள்ளேன்.

சிறிய நிறுவனங்களை பெரிய நிறுவனங்களாக மாற்றும் ஆலோசனைகள், மனிதவளங்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளேன். இதற்காக, அரசியலுக்கு கொஞ்சம் ஓய்வளிக்க உள்ளேன். அதேநேரத்தில், அ.தி.மு.க.,வில் பொறுப்புகளை தொடர்கிறேன். இவ்வாறு, பாண்டியராஜன் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (37)

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    தினகரனால் மற்றும் சசிகலாவால் அதிமுக தோற்றது.பாவம் பாண்டியராஜன்.நல்ல மனிதன்.

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    " மாஃபா " என்றாலே நம்பிக்கைதானே? தொழிலைப் பார்ப்பது நல்லதுதான். அரசியலையே தொழிலாகப் பார்ப்பதை விட இது நல்லதே .அதனால் ஒதுங்க வேண்டியதில்லையே - பதுங்க வேண்டியதில்லையே ?

  • sankaseshan - mumbai,இந்தியா

    படித்தவர் விஷயம் தெரிந்தவர் அரசிய லில் இருந்து ஒதுங்குவது நல்லதல்ல முடிவை மாற்றி கொள்ளட்டும் ,

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    DMK வுக்கு தூது விட்டான் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள் , நாசர் கொடுத்த அடி கொஞ்சமா என்ன , இவனை இவர்கள் ஆட்களே தோற்கடிக்க உதவினார்கள் , என்னவோ மந்திரி என்று எவனையும் மதிக்காததால் அவர்கள் இவரை மிதித்து விட்டார்கள்

  • Nesan - JB,மலேஷியா

    பயந்தான் கோழி மனிதர். ஊழல்வழக்குகள் தன்மேலும் பாயலாம். நமக்கு ஏன் வம்பு, கடசி நிலைமை தெரிந்து விலகுகிறார். பொழைக்க தெரிந்த, தன்னலவாதி. அறிவு கொழுந்து இத்தனைவரிடம் வேலையசெயலாய, தொழிலை வளர்க்க.

Advertisement