dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்: துதிபாடிகளுக்காக மேல்சபை!

Share

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி-, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவை ஒட்டி, மேல்சபையை மீண்டும் கொண்டு வருவதற்குரிய முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாம். தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவே போதிய நிதி இல்லாத காரணத்தால், 'எதை தின்றால் பித்தம் தெளியும்' என்ற நிலையில் தி.மு.க., அரசு உள்ளது.

அரசு வருவாயை பெருக்க, லாட்டரி விற்பனைக்கு அனுமதி தரலாமா அல்லது இயற்கை வளங்களை விற்பனை செய்யலாமா என ஆட்சியாளர்கள் சிந்தித்து வரும் சூழலில், ஏன் இந்த மேல்சபை எனும் விபரீத விளையாட்டு? இந்த மேல்சபையால் தமிழக மக்களுக்கு என்ன பயன்? ஆள்வோரின் அடிவருடிகளை மகிழ்ச்சி அடைய செய்ய மட்டுமே மேல்சபை உதவும். இன்றைய அரசியலானது சேவை மனப்பான்மையுடன் கூடியதாக இல்லை.

பதவிக்கு வந்தால் எந்த விதத்தில் ஆதாயம் பெறலாம் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது. வெறும் எட்டு அமைச்சர்களுடன் காமராஜர், தமிழகத்திற்கு பொற்கால ஆட்சியை கொடுத்தார்.ஆனால், இன்று மாவட்டத்திற்கு ஒன்று, ஜாதிக்கொன்று என 30க்கும் மேற்பட்டோர் அமைச்சர்களாக உள்ளனர். அவர்களால் தமிழகம் முன்னேறுகிறதா? யார், எந்த துறை அமைச்சர் என்பதே இப்போது தெரியவில்லை. மேல்சபை உறுப்பினர்கள் தங்கள் பங்கிற்கு ஆட்சி, அதிகாரத்தில் குறுக்கீடு செய்வர்; நிர்வாகத்தில் முறைகேடு பெருகும். அதை தான் தமிழக அரசு விரும்புகிறதா?

மக்கள் பிரச்னையை தீர்க்க 234 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் 39 எம்.பி.,க்கள் உள்ள நிலையில், இந்த மேல்சபை உறுப்பினர்கள் புதிதாக என்ன செய்துவிடப் போகின்றனர்? துதிபாடிகளுக்காக மேல்சபையை உருவாக்கி, மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (38)

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  மூட்டை மூட்டையாகப் பணம் பார்ப்பதற்கு, மேல்சபை ஒரு சாட்டு.

 • Rajas - chennai,இந்தியா

  இங்கே மேல் சபை வந்தால் மக்களின் வரி பணம் நாசம் என்று சொல்பவர்கள் அங்கே பார்லிமென்டில் எம்பிக்கள் எண்ணிக்கையை 1000 ஆக்க போகிறார்கள் என்ற செய்திக்கு என்ன பதில் எழுதுவார்கள்.

 • Truth Triumph - Coimbatore,இந்தியா

  தினமலர் vazhga

 • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

  மேல் சபை வேண்டும். ஆனால் அதை எந்த எந்த கட்சி சட்ட மன்ற தேர்தலில் எவ்வுளவு சதவிகிதம் வாக்கு பெற்று உள்ளதோ அதே விகிதத்தில் சீட்டுக்கள் கொடுக்கப் பட வேண்டும். தமிழகத்தை பொறுத்த வரை சில முறை எதிர் கட்சிக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளது ஆனால் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

 • Truth Triumph - Coimbatore,இந்தியா

  ஐயா , இங்கே முறைகேடுகள் முறையானது .. இவர்கள் திருடுவதற்குத்தான் தேர்தலில் போட்டி போடுகிறர்கள் . பலே திருடன் தனக்கு பிறகு எதுவும் நிற்காமல் தொடர பயிச்சி அளித்து வளர்த்து விட்டதன் பலன் இன்று பல்கி பெருகி புரையோடி இருக்கிறது ...இதற்க்கு வாக்களிப்பவர்கள் உடந்தை ஆக்க பட்டார்கள். இந்த சிஸ்டம் மாற நல்ல தலைவன் வர .. இந்த வாக்காளர்கள் விடுவார்களா? திருடனுக்கு கொள்ளையன் சாட்சி என்று சிக்ஸர் அடிப்பதை கொண்டாடி குதூகலிப்பதை பார்த்து ...

Advertisement