dinamalar telegram
Advertisement

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொத்தனாருக்கு ஆயுள்

Share
மதுரை:மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் கொத்தனார் ஆனந்தகுமார் 42. திருமணம் ஆனவர். குழந்தைகள் உள்ளனர்.

2016ல் 6 வயது சிறுமி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். அவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆனந்தகுமார் மீது சிலைமான் போலீசார் வழக்குப் பதிந்தனர். பாலியல் துன்புறுத்தலிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. ஆனந்தகுமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement