dinamalar telegram
Advertisement

ஸ்டாலினை சந்திக்க அ.தி.மு.க., மாஜி எம்.பி., தயார்

Share
தஞ்சாவூர் : முதல்வர் ஸ்டாலின்முன்னிலையில், தி.மு.க.,வில் இணைவதற்காக, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., நேரம் கேட்டு காத்திருக்கிறார்.தஞ்சாவூர் முன்னாள் எம்.பி., பரசுராமன். அ.தி.மு.க., தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலராக உள்ளார். 2014ல் தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், எம்.பி.,யாக வெற்றி பெற்றார்.

வைத்திலிங்கத்தின் ஆதரவாளராக இருந்தும், சட்டசபை தேர்தலில் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்த பரசுராமன் சில நாட்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசி வீடியோவெளியிட்டார்.

இந்நிலையில் நேற்று மதியம், 1:30 மணிக்கு தி.மு.க., மாவட்ட அலுவலகத்திற்கு தன் ஆதரவாளர்களுடன் வந்த பரசுராமன், தெற்கு மாவட்ட செயலரும், திருவையாறு எம்.எல்.ஏ.,வுமான சந்திரசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து, இரண்டு மணி நேரம் பேசினார். அப்போது, தி.மு.க.,வில் இணைவதற்காக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். சந்திரசேகரன்,முதல்வர் ஸ்டாலினிடம் பேசி பதில் அளிப்பதாக கூறி அனுப்பி வைத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

  • Prasanna Krishnan -

    All look like.. in photo

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    ஆட்சி மாறினா ஒடிப் போறதுங்கிறதைக் கொள்கையாகவே சிலர் வெச்சிருக்காங்க . கொஞ்ச நாள் போஸ்டரிலே போடுவாங்க .அப்புறம் அம்போதான். " ஒரிஜினல்தான் " சம்பாதிக்கும். உங்களை உள்ளே விடமாட்டாங்க. விளம்பரத்துக்கு மட்டும்தான் உங்களைப் போன்றவர்கள். போனவர்களைப் பார்த்தாவது திருந்துங்கள்.

  • Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    சீக்கிரம் எல்லா பதவி வெறி ஆசை கொண்டவர்களும் போய் சேருங்கள் இனம் இனத்துடன் சேரும்...

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    சென்னை ananth:: அதென்ன ஆதிமுக? இப்படி ஒரு கட்சி இருக்கிறதா? சரியாக தமிழ் எழுதப் பழகுங்கள்.

  • oce -

    அந்நாளில் எம்ஜியார் படங்களில் அவர் வரும் முதல் காட்சியை பார்த்தவுடன் தியேட்டர் அதிரும் படி விசிலடிக்கும் குஞ்சுகளில் இவரும் ஒருத்தர்.

Advertisement