dinamalar telegram
Advertisement

அகவிலைப்படி உயர்வு அறிவிக்க வேண்டும்: அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் வலியுறுத்தல்

Share
மதுரை:''மத்திய அரசு மற்றும் மற்ற மாநில அரசுகள் அறிவித்ததை போன்று தமிழகத்திலும் அகவிலைப்படி உயர்வை அரசு அறிவிக்க வேண்டும்,'' என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மதுரையில் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம் கூறியதாவது: இந்த கொரோனா பேரிடரிலும் ஊழியர்களுக்கு மத்திய அரசு அகவிலைப்படியை உயர்வு அறிவித்துள்ளது. மற்ற சில மாநில அரசுகளும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளன. மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அறிவித்ததும், மாநில அரசும் அறிவிக்கும். கொரோனா பேரிடரிலும் பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு அகவிலைப்படி உயர்வு அறிவிக்க வேண்டும்.

மேலும் அகவிலைப்படி உயர்வு ரத்து, சரண்டர் விடுப்பு ரத்து, பி.எப்., வட்டி விகிதம் குறைப்பு என கொரோனா முதல் அலையின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.இளைஞர்களின் வேலைவாய்ப்பு கருதி, தமிழக அரசு துறைகளில் காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பான புதிய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் நீதிராஜா உடனிருந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement