dinamalar telegram
Advertisement

சென்னை - செங்கோட்டை சிலம்பு ரயில் சேவையில் மாற்றம்

Share
மதுரை:சென்னை எழும்பூர் - செங்கோட்டை வாரம் மும்முறை சிலம்பு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நாட்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.

செங்கோட்டையில் தற்போது வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் புறப்படும் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06182) செப்., 23 முதல் வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் வியாழன், வெள்ளி, சனிகிழமைகளில் புறப்படும் செங்கோட்டை சிறப்பு ரயில் (06181) செப்.,22 முதல் புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இயக்கப்படும்.

ரயில்வே வாரியம் அனுமதி



ராமேஸ்வரத்தில் செப்.,19 முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06793) புதன்கிழமை அதிகாலை 5:05 மணிக்கு பைஸாபாத் சென்றடையும். மறுமார்க்கத்தில் பைஸாபாத்தில் செப்.,22 முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதன்கிழமைகளில் இரவு 10:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06794) சனிக்கிழமைகளில் நள்ளிரவு 3:45 மணிக்கு ராமேஸ்வரம் வரும்.

இந்த ரயில்கள் மானாமதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், சென்னை எழும்பூர், கூடூர், விஜயவாடா, வாரங்கல், பலார்ஷா, நாக்பூர், இட்டார்சி, ஜபல்பூர், சாட்னா, பிரயாக்ராஜ், ஜான்பூர், ஷாகன்ஸ், அயோத்தியா ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும். பைஸாபாத்தில் புறப்படும் சிறப்பு ரயில் சந்திராப்பூரில் நிற்கும்.

மூன்று குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை, பத்து இரண்டாம் வகுப்பு படுக்கை, மூன்று இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி, 2 பார்சல் வேனுடன் இணைந்த மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement