dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் கோயில் நிலங்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் மூர்த்தி தகவல்

Share
மதுரை:“தமிழகத்தில் பதிவுத்துறையில் மேற்கொள்ளப்பட்டகோயில் நிலங்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்படும்” என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: பத்து ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சியில் கிராமங்களில் திட்டங்கள் நடக்கவில்லை. தி.மு.க., ஆட்சி அமைந்து மூன்று மாதங்களில் முதியோர் உதவித் தொகை, இலவச பட்டா கேட்டு ஏராள மனுக்கள் குவிந்து வருகின்றன. வருவாய் துறை செயல்பட்டதா என சந்தேகமாக உள்ளது.ரேஷன் கடைமுறைகேடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கடைகளில் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட அனைவரும் அ.தி.மு.க.,வை சேர்ந்தோர். 'தண்டனை வழங்காததால் தான் அரிசி கடத்தல்கள் நடப்பதாக' மாஜி அமைச்சர் செல்லுார் ராஜூ கூறுவதை ஏற்க முடியாது. ஆட்சி மாறினாலும் கடத்தல் குற்றத்திற்கு அதே தண்டனை தான் வழங்க முடியும். அ.தி.மு.க., ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் தான் அரிசியாக தற்போது வழங்கப்படுகிறது.தற்போது பத்திரப் பதிவுத் துறை சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. ஆய்வில் 624 போலி ஜி.எஸ்.டி., உரிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்மந்தப்பட்ட நபர்கள் , அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் நிலங்களும் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நிலங்கள் பதிவுகள் குறித்தும் விசாரிக்கப்படும், என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement