dinamalar telegram
Advertisement

போலி ஆவணம் மூலம் நிலத்திற்கான இழப்பீடு ரூ.17.84 லட்சம் மோசடி: திருக்கோஷ்டியூர் போலீஸ் விசாரணை

Share
திருக்கோஷ்டியூர்:தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டை போலி ஆவணம், ஆள்மாறாட்டம் செய்து ரூ.17.84 லட்சம் வரை மோசடி செய்தது குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தஞ்சாவூர் - - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை திருக்கோஷ்டியூர் வழியாக செல்கிறது. இதற்காக 2015 ல் இங்கு நில எடுப்பு செய்தனர். அதில் சுள்ளங்குடி குரூப் பட்டா எண் 640 ல் சர்வே எண் 72/1, 72/7 ல் 48 சென்ட் அளவில் நிலம் கையகப்படுத்தினர். அதற்கான இழப்பீடாக ரூ.17 லட்சத்து 84 ஆயிரத்து 268 யை 2016 ல் நில உரிமையாளர்களுக்கென ஒதுக்கினர்.

இதற்கான பணத்தை சுள்ளங்குடியை சேர்ந்த பழனியப்பன் பெற்றுள்ளார். இதற்காக அவர் போலி ஆவணங்களை தயாரித்து அரசை ஏமாற்றியது தெரிந்தது. இது குறித்து சென்னையில் வசிக்கும் காளிதாஸ் மகன் ரமேஷ் சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமாரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரில் நெடுஞ்சாலைக்காக எடுக்கப்பட்ட இடம் ரமேஷின் தாய் வழி பாட்டனார் நாராயணசாமி பெயரில் இருந்துள்ளது. இதற்காக நாராயணசாமி வீட்டிற்கு அனுப்பிய தபாலில் அதே ஊரை சேர்ந்த நாராயணன் மகன் பழனியப்பன், போலி ஆவணம் தயாரித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் இழப்பீடு பெற்று மோசடி செய்தது தெரிந்தது.இது குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement