dinamalar telegram
Advertisement

மூணாறில் வலம் வரும் காட்டுயானை

Share
Tamil News
மூணாறு:கேரளா மூணாறைச் சுற்றி கடந்த ஒரு வாரமாக நடமாடி வரும் ஆண் காட்டு யானைபொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபகாலமாக மூணாறு நகருக்குள் காட்டு யானைகள் நுழைவது வழக்கமாகிவிட்டது. நகரையொட்டியுள்ள பகுதிகளில்கடந்த ஒரு வாரமாக வலம் வந்த ஆண் காட்டு இரு தினங்களுக்கு முன் குடியிருப்பில் புகுந்து வீடுகளின் அருகில் இருந்த வாழைகளை தின்றது. நேற்று முன்தினம் மதியம் 12:30க்கு கிராம்லாண்ட் ரோட்டில் வலம் யானையை பார்த்து அப்பகுதியில் வசிப்பவர்கள் அச்சமடைந்தனர்.

அந்த யானை நேற்று அதிகாலை 3:30 மணிக்கு கிராம்ஸ்லாண்ட் ரோட்டில் உள்ள 20 வரிசை வீடுகளைக் கொண்ட குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அங்கு காலை வரை சுற்றித்திரிந்த யானைமதியம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள காட்டில் முகாமிட்டது. யானையின் நடமாட்டம் பொதுமக்களை கதி கலங்க செய்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement