dinamalar telegram
Advertisement

பெற்றோரை இழந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவி

Share
மூணாறு:கேரளா மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெற்றோரை இழந்த கோபிகா பிளஸ்-2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஏ-பிளஸ் 'கிரேடு' பெற்று சாதித்தார்.

அங்கு 2020 ஆக. 6 இரவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் 66 பேர் இறந்த நிலையில் 4 பேர் மாயமாகினர். அதில் கோபிகாவின் தந்தை கணேசன் தாயார் தங்கம் ஆகியோர் உட்பட நெருங்கிய உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.திருவனந்தபுரத்தில் படித்து வந்த கோபிகாவும் அவரது சகோதரி ஹேமலதாவும் உயிர் தப்பினர். இருவரும் படிப்பில் சுட்டி என்பதால் பெற்றோர்களை பறி கொடுத்த ஒரு மாதத்தில் ஹேமலதா 'நீட்'தேர்வு எழுதினார்.

திருவனந்தபுரம் பட்டம் பகுதி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தகோபிகா தேர்வில்அனைத்து பாடங்களிலும் சிறந்த மதிப்பெண் என்ற அடிப்படையில் ஏ -பிளஸ் 'கிரேடு' பெற்று சாதித்தார். டாக்டராக வேண்டும் என்பது அவரது விருப்பம். அதற்கு தயாராகி வருகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement