dinamalar telegram
Advertisement

தேக்கடி வனப்பகுதியில் வளர்ப்பு புலி: வனத்துறையினர் கண்காணிப்பு

Share
Tamil News
தேக்கடி:தேக்கடியில் உலக புலிகள் தின விழாவை முன்னிட்டு ஆண் வளர்ப்புப் புலியை வேலியிடப்பட்ட வனப்பகுதியில் விட்டு வனத்துறையினர் கண்காணித்தனர்.
கேரளா மங்கலதேவி கண்ணகி கோயில் வனப்பகுதியில் 7 மாதத்திற்கு முன் தாயை விட்டுப் பிரிந்த இரண்டு மாத புலிக்குட்டியை வனத்துறையினர் எடுத்து வளர்த்து வந்தனர். தேக்கடி வன அலுவலகத்தில் இதற்கு வேட்டையாடும் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு 9 மாதம் ஆன இப் புலியை ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள வனப்பகுதியில் 22 அடி உயர கம்பி வேலி அமைத்து அதற்குள் திறந்து விட்டனர். மேலும் அது வேட்டையாடும் திறனை அறிய 10க்கும் மேற்பட்ட முயல்களை அப்பகுதிக்குள் விட்டனர். இதனை கண்காணிக்க 20க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை வனத்துறை உதவி இயக்குனர் மனு சத்யன், ரேஞ்சர் அகில் பாபு செய்திருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement