dinamalar telegram
Advertisement

தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., கூட்டணி? உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு செக்!

Share
உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்ப்பதன் வாயிலாக, காங்கிரஸ் கட்சி கேட்கிற ஐந்து மேயர் பதவி பேரத்திற்கு, 'செக்' வைக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

விருப்பம்



தமிழகத்தில் விடுபட்டுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலை சந்திக்க தயாராகும் வகையில், தி.மு.க., மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. தமிழகம் முழுதும் மொத்தமுள்ள 15 மேயர் பதவிகளில், ஐந்தை காங்கிரஸ் கேட்கிறது. ஆனால், காங்கிரசுக்கு ஒரு மேயர் பதவி மட்டுமே தர, தி.மு.க., முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க, தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்க தி.மு.க., தலைமை விரும்புகிறது. தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சேருமானால், காங்கிரஸ் கட்சிக்கு பேரம் பேச வாய்ப்பு இல்லாமல் போகும்.

கணக்கு



காங்கிரசுக்கு தென் மாவட்டங்களில் மட்டும் தான் ஓட்டு வங்கி உள்ளது. வட மாவட்டங்களில் ஓட்டு வங்கி இல்லை என, தி.மு.க., கருதுகிறது.அதே சமயம், தே.மு.தி.க.,வுக்கு 2 சதவீத ஓட்டுகள் தமிழகம் முழுதும் பரவலாக உள்ளன.குறிப்பாக, பா.ம.க., ஓட்டு வங்கி அதிகமாக காணப்படுகிற வட மாவட்டங்களில், தே.மு.தி.க.,வுக்கு ஓட்டு வங்கி உள்ளது.

எனவே, பங்கீடு பேச்சில் அதிருப்தி ஏற்பட்டு காங்., தனித்து போட்டியிட்டால், தே.மு.தி.க., வாயிலாக ஈடுசெய்து விடலாம் என, தி.மு.க., கணக்கு போடுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வை எதிர்த்து காங்கிரஸ் பல இடங்களில் தனித்து போட்டியிட்டது. வரும் தேர்தலில், காங்கிரஸ் எதிர்பார்க்கிற பங்கீடு கிடைக்கவில்லை என்றால், தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா என்பது குறித்து ஆலோசிக்க தமிழக காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது.

ஆலோசனை கூட்டம்



இதற்காக, சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்றும், நாளையும் எதிர்கால செயல்திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் அழகிரி தலைமையில் நடக்கிறது. இதில், மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்தியகாங்கிரஸ் செயலர் சிரிவெல்ல பிரசாத் ஆகியோர் பங்கேற்கின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில், முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், மேலிட பொறுப்பாளர்கள், செயல் தலைவர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

- நமது நிருபர் -

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

  • raja - Cotonou,பெனின்

    அழுதுனாவது நம்ப அழகிரி வாங்கிவிட மாட்டாருன்னு கான்-கிராசு தொண்டர்கள் நம்புறாங்க....

  • raja - Cotonou,பெனின்

    அ ழுதுனாவது நம்ப அழகிரி வாங்கிவிட மாட்டாருன்னு கான்-கிராசு தொண்டர்கள் நம்புறாங்க....

  • Narayanan Muthu - chennai,இந்தியா

    இதுவும் கொங்குநாடு மாதிரியான கொளுத்திப்போடும் வேலையா இல்லை உங்களின் மனதில் உள்ள நீண்ட கால அபிலாஷையா.

  • kamalakkannan.G - Tiruppur,இந்தியா

    திமுக தான் அனைத்தையும் அள்ளப்போகிறது. திமுகவினருக்கு ஜாக்பாட்.

  • duruvasar - indraprastham,இந்தியா

    சதீஷ் அதிமுகவுடன் பேச்சை ஆரம்பிப்பார். பண்ணை வீடு சந்திப்பு எப்போது என்பது மூடுபனியாகவே இருக்கு.

Advertisement