dinamalar telegram
Advertisement

மரியாதை தராத கலெக்டர்அப்செட் ஆன அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்

Share
Tamil News
கோவை:இருக்கையில் அமர்ந்தபடி, கோவை கலெக்டர் மனு வாங்கியதால், 'அப்செட்' ஆன அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களான முன்னாள் அமைச்சர் வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமன் உள்ளிட்டோர், கோவை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். வேலுமணி மனு கொடுக்க அருகில் சென்றார். கலெக்டர் சமீரன் அமர்ந்து கொண்டே மனுவை பெற தயாரானார். இதை கவனித்த மற்ற எம்.எல்.ஏ.,க்கள், 'ஏன் எழுந்து நின்று வாங்க மாட்டீர்களா' எனக் கேட்டனர்.

சுதாரித்த கலெக்டர் எழுந்து, மனுவை வாங்கினார். அதற்குள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அடுத்தடுத்து கொந்தளித்தனர். பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன், ''இது மிகவும் தவறு சார். நான் 25 வருஷமா மக்கள் பிரதிநிதியா இருக்கேன்,'' என கலெக்டரை பார்த்து கூறினார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், ''என்ன பழக்கம் இது, புதுப் பழக்கமா இருக்குது,'' என, கோபத்துடன் கூறினார்.

'தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அரசு விழாக்களுக்கு எம்.எல்.ஏ.,க்களை அழைக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் வலியுறுத்தி இருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement