dinamalar telegram
Advertisement

ஆடி திருவிழா ஆக.1ல் ராமேஸ்வரம் கோயிலில் கொடியேற்றம்

Share
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் முக்கிய விழாவாக ஆடி திருக்கல்யாணம், மாசி சிவராத்திரி விழா கொண்டாடப்படும் நிலையில் ஆக., 1ல் கோயில் அம்மன் சன்னதி முன்புள்ள கொடிகம்பத்தில் ஆடித் திருவிழா கொடி ஏற்றப்பட உள்ளது.

ஆடி அமாவாசையான ஆக., 8ல் கோயிலில் சிறப்பு பூஜை அபிஷேகம் நடக்கும்.கொரோனா பரவலை தடுக்க ஆக., 9ல் ஆடித் தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது. ஆக., 11ல் ஆடித்தபசு, ஆக.,12ல் கோயில் வளாகத்திற்குள் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

கோயில் மூடலா



இந்நிலையில் ஆடி அமாவாசை தினத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி கடலில் நீராட ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதை தவிர்க்க ஆக. 7, 8ல் கோயில் மூடப்படுகிறது என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.இதுதொடர்பாக இன்னும் எந்த முடிவையும் கோயில் நிர்வாகம் அறிவிக்கவில்லை.

இதுபற்றி ஹிந்து முன்னணி மாவட்ட பொது செயலர் ராமமூர்த்தி கூறுகையில், ''வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ராமேஸ்வரம் கோயிலில் ஆடி திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.நீராட தடை விதிக்க கூடாது. அன்றைய தினம் கோயில் நடை சாத்தப் படும் என சமூக வலைதளத்தில் பரவும் செய்திக்கு கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவிக்காதது வேதனைக்குரியது'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement