dinamalar telegram
Advertisement

வெடிவைத்து மீன் பிடித்த நான்கு பேர் கைது ஜெலட்டின், டெட்டனேட்டர் குச்சிகள் பறிமுதல்

Share
Tamil News
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை கடலில் வெடி வைத்து மீன் பிடித்த நால்வர் கைது செய்யப்பட்டனர். ஜெலட்டின், டெட்டனேட்டர் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடலோர பாதுகாப்பு குழும ஏ.டி.எஸ்.பி., பரமசாமி உத்தரவில் ராமநாதபுரம் மரைன் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் எஸ்.ஐ.,க்கள் கணேசமூர்த்தி, அய்யனார் மற்றும் போலீசார் நேற்று காலை திருப்பாலைக்குடி கடலில் படகில் ரோந்து சென்றனர். வெடிவைத்து மீன்பிடிப்பது தெரியவந்தது. படகில் இருந்து தப்ப முயன்ற நால்வரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் மோர்ப்பண்ணை கென்னடி 28, கோவிந்தராஜ் 31, ஆறுமுகம் 45, வெடிபொருள் சப்ளை செய்த தொண்டி புதுக்குடியை சேர்ந்த கண்ணன் 30, என்பது தெரியவந்தது. 22 ஜெலட்டின் குச்சிகள், 5 டெட்டனேட்டர்கள், ஒரு ஜி.பி.எஸ்., கருவி பறிமுதல் செய்யப்பட்டது. தேவிப்பட்டினம் மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement