dinamalar telegram
Advertisement

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தீ: ஆவணங்கள் சேதம்

Share
Tamil News
ராமநாதபுரம்:ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் சேதமாகின. முறைகேடுகளை அழிக்க மர்மநபர்கள் தீ வைத்தனரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கட்டடத்தில் கல்வித்துறை, நில அளவைத்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட மகிளா நீதிமன்றம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு ஆவணங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இப்பகுதியில் வெளியாட்கள் நடமாட்டம் அதிகம். அலுவலக வாசல்கள் பூட்டப் படுவதில்லை. ஆறு மாதங்களுக்கு முன் தரை தளத்தில் உள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் தீப்பற்றி எரிந்தது.

முக்கிய ஆவணங்கள், பணியாளர்களுக்கு எதிரான புகார் ஆவணங்கள் எரிந்தன.நேற்று காலை 6:45 மணிக்கு நில அளவை தொழில் நுட்ப பிரிவு அலுவலகத்தில் தீப்பற்றியது. அருகிலேயே தீயணைப்பு நிலையம் உள்ளதால் இரண்டு நிமிடங்களில் அங்கு சென்ற வீரர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். ஆனால் அதற்குள் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பைல்கள், நில அளவை ஆவணங்கள் சாம்பலாகின. அரை மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டு, எரியாத ஆவணங்கள் வெளியே எடுக்கப்பட்டன.

தடய அறிவியல் நிபுணர்கள் சோதனையில் தீப்பற்றிய பகுதியில் மண்ணெண்ணெய் வாசனை வருவதாக தெரிவித்தனர். ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி விசாரிக்கிறார்.எலி, அணில் கதையாகி விடுமாஆறு மாதங்களுக்கு முன் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்துக்கு எலிதான் காரணம் என அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

மின் வயர்களை எலிகள் கடித்ததால் தீப்பொறி ஏற்பட்டு தீப்பற்றி பைல்கள் எரிந்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே மின் தடைக்கு அணிகள் காரணம் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ள நிலையில் இப்போது நில அளவைத்துறையில் நடந்த தீ விபத்திற்கு என்ன காரணம் கூறப்போகின்றனரோ...
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement