dinamalar telegram
Advertisement

அவதூறு பேச்சு : திரிணமுல் காங். பெண் எம்.பி.,மீது பா.ஜ., எம்.பி. புகார்

Share
புதுடில்லி: தன்னை' பீஹாரி குண்டர்' என பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என திரிணாமுல் காங்., பெண் எம்.பி., மெஹூவா மொய்த்ரா மீது பா.ஜ. எம்.பி., நிஷிகாந்த் துபே, லோக்சபா சபாநாயகரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த, 19ம் தேதி துவங்கியது. போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை முன் வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், பார்லி.,யின் இரு அவைகளும் முடங்கியுள்ளன. இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான பார்லிமென்ட் குழு கூட்டம் நடந்தது. அப்போது, திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா, 'பீஹாரி குண்டர்' என, என்னை பார்த்து மூன்று முறை குறிப்பிட்டார்.
நான் எம்.பி.,யாக 13 ஆண்டுகளாக உள்ளேன். இதுபோல் அவமதிக்கும் வகையில் யாரும் பேசியதில்லை. பீஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஹிந்தி பேசும் மாநில மக்களை, திரிணமுல் காங்.,குக்கு பிடிக்கவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு மொய்த்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். ''அது போன்ற ஒரு கூட்டமே நடக்கவில்லை. அப்படி இருக்கையில் நான் எப்படி அவரை திட்டியிருக்க முடியும்,'' என, மொய்த்ரா குறிப்பிட்டார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • sundarsvpr - chennai,இந்தியா

    பாராளுமன்ற அவை தலைவரிடம் கூறி என்ன பயன்? அவரால் இருக்கையில் உட்கார்ந்து அவையை நடத்த இயலவில்லை. உட்காருமுன் கூச்சல் குழப்பம். சிறிய சலசலப்பு இல்லாமல் அமைதியாய் அவையை நடுத்துகிறோரோ அவர் பாரத ரத்தின விருதுக்கு தகுதியானவர். அப்படி நடக்க வாய்ப்பில்லை.

  • Appan - London,யுனைடெட் கிங்டம்

    இவர்களை நம்பித்தான் பிஜேபி கட்சி இருக்கிறது..நாடு உருப்பதால் போல் தான்..ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் இந்தியில் பதில்..இப்படி நடந்தால் இந்திய இருக்குமா..?.சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேயர்களுக்கு அடிமை..இப்போ இந்திக்காரர்களுக்கு அடிமை..இதற்க்கா சுதந்திரம் பெற்றோம்..?..

  • Bhaskaran - Chennai,இந்தியா

    தமிழ் நாட்டில் ஒரு மந்திரி பீஹாரிகள் மூலையில்லாதவங்கன்னு சொல்லியிருக்காருப்பா

Advertisement