dinamalar telegram
Advertisement

பசு வதை தடுப்பு சட்டம் இப்ராஹிம் வலியுறுத்தல்

Share
Tamil News
மதுரை:''பசு வதை தடுப்பு சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வர வேண்டும்,'' என, பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மதுரையில் அவர் அளித்த பேட்டி:ஹிந்துக்கள் புனிதமாக கருதும் பசுக்களை கொல்வது, அவர்களது மத உணர்வை கொச்சைப்படுத்துவதாகும். இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 48ன்படி பசு வதை கூடாது என இருந்தும், தொடர்ந்து தமிழகத்தில் பசு வதை நடக்கிறது. பசு வதை தடுப்பு சட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் வரும் சட்டபை கூட்டத்தில் கொண்டு வர வேண்டும்.

சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பா.ஜ., இருக்கிறது என திட்டமிட்டு, காங்., - கம்யூ., - தி.மு.க., செய்யும் அவதுாறு பிரசாரத்தை மக்களிடம் எடுத்து கூறி வருகிறோம். தி.மு.க., ஆட்சி வந்த பின், பா.ஜ., நிர்வாகிகள் மீது போலீஸ் நெருக்கடி அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூர் சர்ச்சில் வழிபாடு நடத்திய இப்ராஹிம் கூறியதாவது: தமிழகத்தில் சர்ச், மசூதிக்கு ஹிந்துக்கள் செல்கின்றனர். அதேபோல் கிறிஸ்துவர், முஸ்லிம்களும் ஹிந்து கோவில்களுக்கு சென்று வருவது சகஜம் தான். மத்திய பா.ஜ., அரசு சிறுபான்மை மதங்களில் உள்ள ஒரு சில புல்லுருவிகளை மட்டும் தான் எதிர்க்கிறது. பொதுவாக கிறிஸ்துவர், முஸ்லிம்களுக்கு எதிரானது பா.ஜ., என்ற பிம்பம் உள்ளது.

இதை உடைக்கும் விதமாக, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் சர்ச்சுக்கு வந்துள்ளேன். இந்த சர்ச்சிற்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில், மத்திய அரசு தபால் தலை வெளியிட்டு, கிறிஸ்துவர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement