dinamalar telegram
Advertisement

மாஜி எம்.எல்.ஏ.,வின் மருமகன் மீது வழக்கு

Share
கோவை:பெண் அளித்த மோசடி புகாரில், முன்னாள் எம்.எல்.ஏ., கோவை தங்கம் மருமகன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

கோவை, காளப்பட்டியைச் சேர்ந்தவர் சிந்துஜா. இவர் சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில், 28ம் தேதி அளித்த புகாரில், த.மா.கா., முன்னாள் எம்.எல்.ஏ., கோவை தங்கத்தின் மருமகன் அருண்பிரகாஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, 7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறியிருந்தார்.

பணத்தை திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். இது குறித்து, அவர் ஏற்கனவே கோவை கிழக்கு மகளிர் போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, அருண்பிரகாஷ் மீது காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், ஏமாற்றுதல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ., கோவை தங்கம் கூறுகையில், ''கொலை மிரட்டல் விடுத்ததாக என் மீதும் அபாண்டமாக பொய் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையைச் சேர்ந்த த.மா.கா.,வினர் சிலரின் துாண்டுதலில், என்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் புகார் கூறியுள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, என் செல்வாக்கை கெடுப்பதற்காக துாண்டி விட்டுள்ளனர்,'' என்றார்.கோவை தங்கம் தற்போது தி.மு.க.,வில் உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement