dinamalar telegram
Advertisement

மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27 சதவீத இடஓதுக்கீடு : ஸ்டாலின் வாழ்த்து

Share
மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27 சதவீத இடஓதுக்கீடு செய்துள்ளமத்திய அரசுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27 சதவீத இடஓதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்திருப்பது சமூக நீதி போராட்டத்திற்கான முதல் வெற்றி.

மத்திய அரசு வெளியிட்டுள்ள இட ஒட ஒதுக்கீட்டு அறிவிப்பின்படி எம்.பி.பி.எஸ்.,சிற்கு 1,500 இடங்களும் முதுகலை எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு 2500 இடங்கள் என மொத்தம் 4 ஆயிரம் இடங்கள் கிடைக்கப்பெறும்

மத்திய அரசின் பணிகள் மற்றும்கல்விநிலையங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது. தற்போது 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டாலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் படி ஓபிசிக்கு 50 சதவீத இட ஒதுக்கிடு செய்யப்பட வேண்டும் என்பது திமுகவின் கோரிக்கையாகும். அத்தகைய சமூக நீதியை அடையும் வரை தி.மு.க., தலைமையிலான அரசு தொடர் நடவடிக்கையை மேற்கொள்ளும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (19)

  • RK -

    இடஒதிக்கீடு என்று மாறுமோ அப்போதான் இந்தியா திறமை மிக்க வல்லரசாகும். திறமைக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஜாதிகளுக்கு இடஒதிக்கீடு கொடுத்து மருத்துவத்தில் முட்டாள்களின் ஆதிக்கத்தால் பல உயிர்கள் பறி போக இடஒதிக்கீடு அரசியல் நாட்டிற்கு நல்லதல்ல.

  • vbs manian - hyderabad,இந்தியா

    இருபத்தேழுக்கு வாழ்த்து பத்துக்கு கண்டனமா.

  • duruvasar - indraprastham,இந்தியா

    ஒன்றிய அரசு இலவசமாக கொடுக்கும் தடுப்பு ஊசியை தமிழக ஊராட்சி ஒன்றியத்தில் சாதி மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக வழங்கி தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறிதியை காப்பாற்றி சமூகநீதியை காத்த வாழும் வள்ளுவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்த வயது இல்லை.

  • என்னுயிர்தமிழகமே - Ameerpet, hyderabad,இந்தியா

    திறமைக்கு முன்னுரிமை கொடுங்க

  • என்னுயிர்தமிழகமே - Ameerpet, hyderabad,இந்தியா

    அட்லீஸ்ட் மருத்துவ துறையிலவது இட ஒதுக்கீடு வேண்டாம்

Advertisement